Breaking News

யாழ். வைத்தியசாலையின் சேவை மக்களுக்கு கிடைப்பதையிட்டு பெருமிதம் - சி.வி.

யாழ். போதனா வைத்தியசாலையானது மிகக் குறைந்த வளங்களுடன் செயலாற்றுகின்றபோதும் அதன் சேவைகள் மிகப் பெரிய அளவில் மக்க ளுக்குக் கிடைப்பதையிட்டு நாம் பெருமிதம் அடைய வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளாா். 

யாழ்.போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட தாதிகள் விடுதி மற்றும் இலங்கை அரச மருந் தாக்கல் கூட்டுத் தாபனத்தின் 'அரச ஒசுசல' மருந்தகத் திறப்பு விழா யாழ். போதனா வைத்தியசாலையின் அத்தி யட்சகர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி தல‍ைமையில் இன்று நடைபெற்றுள்ளது.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் மேலும் தெரி விக்கையில், 

இருதய அறுவை சிகிச்சைகள் இடம்பெறுகின்ற நாடளாவிய அரச வைத்திய சாலைகளில் நான்கில் ஒரு இடத்தை யாழ். போதனா வைத்தியசாலையும் பெற்றுள்ளமை எமது இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களின் பிரதி உபகாரம் கருதாத சேவை மனப்பாங்கை வெளிப்படுத்தியுள்ளது. 

யாழ். போதனா வைத்தியசாலையில் இருதய அறுவைச்சிகிச்சை மேற்கொள் வதற்கான விசேடப் படுக்கை வசதிகள் இரண்டை மட்டுமே கொண்டுள்ள போதும் எமது வைத்திய நிபுணர் மிகச் சிறப்பாக இக் குறுகிய வளங்களுடன் சேவையாற்றுவது பாராட்டத்தக்க வேண்டிய விடயம். 

இந் நிலையில் அவ்வாறான சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர் இங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது இங்கிருக்கும் அறுவைச் சிகிச்சை நிபுணர் நான் பதவிக்கு வந்த பின்னரே இங்கு வந்தார். 

அவரை மாற்ற வேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை. இரண்டு வருடங்களின் பின்னர் வடக்கு வைத்தியர்களை மாற்றம் செய்யும் பழக்கம் இங்கு போர்க்காலத்தில் அமுலில் இருந்தது. தற்போது அவ்வாறான முறை அவசியமில்லை. 

எனவே இவ்வாறான நற்சேவை செய்து வருபவர்களை தயவு செய்து தொடர் ந்தும் இங்கு சேவை செய்வதற்கு அனுமதியளியுங்கள். அதுபோன்றே ஏனைய துறைசார் வைத்திய நிபுணர்களும் இங்கு தமது சேவைகளைத் திறம்பட முன் னெடுத்துள்ளனா்.

எவ்வாறெனினும் யாழ். போதனா வைத்தியசாலையானது மிகக் குறைந்த வளங்களுடன் செயலாற்றுகின்றபோதும் அதன் சேவைகள் மிகப் பெரிய அள வில் மக்களுக்குக் கிடைப்பதையிட்டு நாம் பெருமிதம் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா். 

இந் நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, பிரதியமைச்சர் பைஸல் காசிம் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க பாரா ளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, விஜயகலா மகஸே்வரன், சரவணபவன் மற்றும் சரவணபவன் உட்பட பலர் கலந்து சிறப்பித்துள்ளனா்.