Breaking News

குற்றப் புலனாய்வு வாக்குப் பதிவை வழங்கிய மஹிந்த.!

கடந்த 2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து குற்றப்புலனாய் வுப் பிரிவு குழுவினர் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர்.

இதற்கிணங்க குற்றப்புலனாய்வு பிரி வின் அதிகாரிகள் குழு இன்று முற் பகல் 11.30 மணியளவில் கொழும்பு-07, விஜயராம மாவத்தையிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோக பூர்வ இல்லத்துக்குச் சென்று வாக்கு மூலத்தை பெற்றுள்ளனா்.

சி.ஐ.டி.யினர் வாக்குமூலத்தை பெற்றுக் கொண்டிருந்த வேளை ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, எஸ்.பி. திஸாநாயக்க, கெஹலிய ரம்புக்வெல்ல, பவித்திரா வன்னியாராச்சி ஆகியோ ரும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் கூடியுள்ளனா்.