Breaking News

நடுவானில் சம்பந்தனும் மைத்திரியும் கலந்துரையாட கிடைத்த சந்தர்ப்பம் !

உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை மற்­றும் அர­சி­யல் தீர்வை உள்­ள­டக்­கிய புதிய அர­ச­மைப்­பின் அவ­சி­யம் தொடர்­பாக எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் நேற்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வு­டன் பேச்சு நடத்­தி­யுள்­ளார்.

அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் உணவு ஒறுப்­பில் ஈடு­பட்­டுள்ள அர­சி­யல் கைதி­க­ளின் நிலைமை தொடர்­பாக அரச தலை­வ­ருக்கு விளக்­க­ம­ளித்த எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன், அனை த்து அர­சி­யல் கைதி­க­ளை­யும் விடு­விக்க வேண்­டுமென வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

திரு­கோணம­லை­யில் கோம­ரங்­க­ட­வல பிர­தே­சத்­தில் அமைக்­கப்­பட்ட யானைப் பாது­காப்பு வேலி நேற்று திறக்­கப்­பட்­டது. அந்த நிகழ்­வில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும், எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா. சம்­பந்­த­னும் கலந்­து சிறப்பித்துள்ளாா்.

நிகழ்­வின் பின்­னர் உலங்­கு­வா­னூர்­தி­யில் கொழும்பு திரும்­பு­போது இரு­வ­ரும்  கலந்­து­ரை­யா­டி­யுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக நீண்­ட­கா­ல­மா­கத் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சி­யல் கைதி­கள் விட­யத்­தில் அரச தலை­வர் விரைந்து நட­வ­டிக்கை எடுக்க வேண்­டுமென எதிர்க்­கட்­சித் தலை­வர் இக் கலந்­து­ரை­யா­ட­லில் தெரிவித்துள்ளதாக தெரி­விக்­கப்­பட்டுள் ளது.

குற்­றஞ்­ சாட்­டப்­பட்­டுள்ள விடு­த­லைப் புலி­கள் உறுப்­பி­னர்­க­ளை­யும், இரா­ணு­வத்­தி­ன­ரை­யும் பொது மன்­னிப்­பின் அடிப்­ப­டை­யில் விடு­விப்­பது தொடர்­பாக அர­சால் முன்­ வைக்­கப்­பட்ட யோசனை தொடர்­பா­க­ பேசப்­பட்­டதெனத் தெரி விக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்­க­ளின் அர­சி­யல் வேண­வாக்­களை நிவர்த்தி செய்­யக் கூடிய அர­மைப்­புத் தீர்­வுத் திட்­டம் வரை­வில் முன்­வைக்­கப்­பட வேண்­டுமென அரச தலை­வ­ரி­டம் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.