Breaking News

ஈழத்தை உலுக்கிய கோர விபத்து; தாயகம் திரும்பும் உறவுகளே எச்சரிக்கை!

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தவர்கள் யாழ்ப்பாணம் நோக்கி பயணித் துக் கொண்டிருக்கையில் இவ் விபத்து நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட் டுள்ளது. 

வவுனியா ஓமந்தை பகுதியில்  நடை பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் உயி ரிழந்தனர். மேலும் இருவர் படு காயம் அடைந்து வைத்தியசாலை யில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.

சுவீடன் நாட்டிலிருந்து தாயகம் திரும்பியவர்களும் இந்த கோர விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர். குறித்த விபத்தில் சுவீடன் நாட்டு பிரஜையான 30 வயதான கமலநாதன் சிவரஞ்சனி உயிரிழந்துள்ளார்.

அத்துடன் நெடுந்தீவு மேற்கை சேர்ந்த 32 வயதான காண்டீபன் யமுனா ரஞ்சனி, 56 வயதான இசை ஞானவதி யோகரத்னம், 13 வயதான காண்டீபன் டிசாலினி ஆகியோரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர். விபத்து காரணமாக சுவீடனை சேர்ந்த 34 வயதான ஜேம்ஸ் கமலநாதன் மற்றும் ஆறு வயதான கமலநாதன் ஜெசிகா படுகாயம் அடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்புவோர் யாழ்ப்பாணம் செல்லும் போது விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லண்டனிலிருந்து தாயகம் திரும்பிய பெண் ணொருவர் யாழ்ப்பாணம் செல்லும் போது ஏ-9 வீதியில் உயிரிழந்துள்ளார்.

கடந்த சில வருடங்களில் விடுமுறையை களிக்கவும், உறவினர்களை பார்க் கவும் இலங்கை வரும் பல புலம்பெயர் ஈழத்தமிழர்கள் குறிப்பாக யாழ் தமி ழர்கள் யாழ் செல்லும் போது விபத்தில் சிக்கியுள்ள சம்பவங்கள் சோகத்தை ஏற்படுத்தியவாறு உள்ளன.

எனவே புலம்பெயர் தேசங்களில் இருந்து விமானம் மூலமாக கட்டுநாயக்க வந்து இரவோடிரவாக சாரதியின் நிலையறியாமல் (தூக்கமின்மை) அவர்க ளுக்கு நேரம் ஒதுக்காமல் யாழ் செல்ல வற்புறுத்தப்படுகின்றனர்.

இதனால் தூக்க கலக்கத்தில் சாரதியும் வாகனத்தை செலுத்திகின்றதனால் விபத்துக்களில் சிக்கி விலை மதிப்பற்ற உயிரை இழக்கின்றனர். புலம் பெயர் தமிழர்களே இது தொடர்பில் கவனம் செலுத்தி, மணித்தியாலங்கள் கடந்தா லும் பரவாயில்லை வாகனங்களை கூலிக்கு அமர்த்தும் பொதுச் சாரதியின் நிலையை அறிந்தும், அவர்கள் நேரம் கேட்டால் அதற்கான நேரத்தை ஒதுக்கி பொறுமையாக உங்கள் பயணத்தை தொடருங்கள் என எமது இணையத்தளம் ஊடாக தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.