Breaking News

19 ஆவது திருத்­தத்தில் எனக்கு ஆட்சேபனை இல்லை - மஹிந்த

மக்கள் விடு­தலை முன்­னணி சமர்ப்­பித்­தி­ருக்கும் 20 ஆவது திருத்தம் நாட்­டுக்கு தேவை­யற்­ற­தொன்­றாகும்.

19 ஆவது திருத்­தத்தில் எனக்கு எந்த பிரச்­சி­னையும் இல்லையென முன் னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்துள்ளாா். அநு­ரா­த­புரம் ஜயஸ்ரீ விகா­ரைக்கு நேற்று வழி­பாட்­டுக்­காக சென்­றி­ருந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ வழி­பா­டு­களின் பின்னர் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள் விக்கு பதிலளிக்கையிலேயே இவ் வாறு தெரிவித்துள்ளாா். 

மக்கள் விடு­தலை முன்­னணி பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பித்­திருக்கும் அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்தம் வெற்றி­ய­ளிக்­கப்­போ­வ­தில்லை. அவ்­வாறு அதனை நிறை­வேற்ற வேண்­டு­மாக இருந்தால் மக்கள் அபிப்­பி­ராய வாக்­கெ­டுப்­புக்குச் செல்­ல­வேண்­டி­ வரும். குறுக்­கு­ வ­ழியால் சென்று இதனை அங்­கீ­க­ரித்­துக்­கொள்­ளவே முயற்­சித்­தனர்.

என்­றாலும் நீதி­மன்றம் ஒரு­போதும் அதற்கு இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை என்ற நம்­பிக்கை எங்­க­ளுக்கு இருக்­கின்­றது. எந்த திட்­ட­மி­டலும் இல்­லா­மலேயே இவர்கள் இந்த திருத்­தத்தை மேற்­கொண்­டுள்­ளதாகத் தெரிவித்துள்ளாா்.