Breaking News

அனந்தி தலைமையில் புதிய கட்சி ஆரம்பம்

வடமாகாணசபை மகளீர் விவகார அமைச்சர்
அனந்தி சசிதரன்புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கவிருப்பதாக தெரியவருகின்றது. கடந்த இரு மாதங்களாக முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான புதியகட்சி உதமாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நேரத்தில் அனந்தியின் புதிய கட்சி அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ஏற்கனவே தமிழரசு கட்சியுடன் முரண்பாட்டில் ஈடுபட்டிருந்த அனந்தி சசிதரன் முதலமைச்சர் தலைமையிலான அணியுடன் செயற்பட்டுவந்திருந்த நிலையில் முதலமைச்சருக்கு பதிவுசெய்யப்பட்ட கட்சி ஒன்று இல்லாத நிலையில் அனந்தியின் இன்னகர்வு இடம்பெற்றுள்ளது.

ஈழத்தமிழர் சுயாட்சி கழகம் என்ற பெயரிலேயே கட்சி பதிவு செய்யப்படவிருப்பதாக தெரியவருகின்றபோதும் முதலமைச்சர் இந்த கட்சியின் பெயரில் களமிறங்கமாட்டார் என்றும் ஏற்கனவே முதலமைச்சர் அணியிலுள்ள முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அமைப்பொன்றை கொண்டுள்ளதாலும் முதலமைச்சர் தலைமையில் களமிறங்க தயார் என அறிவித்துள்ள பெரும் தரப்பான த.தே.மக்கள் முன்னணி, சுரேஸ் அணி, தமிழரசு கட்சி அதிர்ப்த்தியாளர் அணி மற்றும் மக்கள் பேரவை என்பவற்றை மையப்படுத்தியே அவரது பயணம் ஆரம்பிக்கும் என முதலமைச்சருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனந்தியின் இன்நகர்வானது முதலமைச்சர் தலைமையிலான அணி தொடங்குகின்றபோது அதில் தனது தரப்பிலிருந்தும் ஒரு அமைச்சினை கோருவதற்கான முன்னாயர்த்தமாகவே அனந்தி அவசரப்படுவதாக மக்கள்பேரவையை சேர்ந்த ஒருவர் தமிழ்கிங்டொத்திடம் தெரிவித்துள்ளார்.