Breaking News

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நாமலை சந்தித்த அங்கஜன்,வியாழேந்திரன்.!

இதுவரை காலமும் வழக்கு பதிவு செய்யப்படாமல் சிறையில் வாடும் அரசி யல் கைதிகளின் விடுதலை தொடர்பாக மேலதிகமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பொறிமுறைகள் மற்றும் ஆரம்ப கட்ட நடவடிக்கைக்கள் குறித்து ஆலோசிப்பதற்காக ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட விசேட குழு சார்பில் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன்,

கிழக்கு அபிவிருத்தி பிரதி யமைச்சர் வியாழேந்திரன் மற்றும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் மஸ்தான் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜ பக்‌ஷ ஆகியோர் நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளனா்.

அதேவேளை அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட விசேட குழு சார்பில் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன், கிழக்கு அபிவிருத்தி பிரதியமைச்சர் வியாழேந்திரன் மற்றும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் மஸ்தான் ஆகியோர் நீதியமைச்சர் சுசில் பிரேமஜயந்த உடனும் முக்கிய கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனா்.

விவசாய பிரதி அமைச்சர் வட கிழக்கு விவசாய பெருமக்களை பொன்னான யுகம் நோக்கி அழைத்து செல்ல சிறந்த செயற்திட்ட நகர்வுகளை மேற் கொண்டு வரும் இந்நிலையில் மீனவர்கள்,அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், வாழ்வாதார மேம்பாடுகள்,

இயற்கை அனர்த்த சூழ்நிலையின் போதான இழப்பீடு, காப்புறுதி தொடர்பாகவும் கவ னம் செலுத்தி விடயங்களிற்கு பொறுப்பான அமைச்சுடனும் சந்திப்புடன் கூடிய கலந்து ரையாடலை மேற்கொண்டு வருகின்றமை சுட்டிக் காட்டத்தக்கது.

அத்தோடு யாழ் மாவட்ட மீனவர்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினை களுக்கு நிரந்தர தீர்வுகள் பெற்று கொடுக்கப் பட வேண்டுமென விடயத்திற்கு பொறுப் பான அமைச்சு நடவடிக்கைகளை ஏற்படுத்தி துரிதமாக சிறந்த பருந்துரை களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

17 பரிசோதகர்கள் காணப்பட வேண்டிய நிலையில் தற்போது 11 பேர் காணப் படுவதாகவும் எஞ்சிய 6 வெற்றிடங்களும் நிரப்பப்பட்டால் யாழ் மாவட்ட மீன வர்களின் பிரச்சினைகளுக்கு இலகுவான முறையில் தீர்வுகளை ஏற்படுத்த லாம் எனவும்,

வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ளூர் மீனவர்களுடனான தொழில் முரண் பாடுகளுக்கு நிரந்தரமான தீர்வுகளை நோக்கியதான நகர்வுகள் நடைபெற வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.

மீனவர்களுக்கு 150000 இலட்சம் பெறுமதியான உபகரண உதவி திட்டங்கள், வடக்கு மீனவர்களின் வாழ்வாதார நலனை அடிப்படையாக கொண்டு மேலும் அதிகரித்து வழங்குமாறும் தெரிவித்தார்.குருநகர், பாசையூர், காக்கைதீவு, மற் றும் கொழும்புத்துறை ஆகிய பிரதேச மீனவர்களுக்கான கடல் வழிப் பாதை யில் ,

அழிவடைந்த நிலையில் வெளிச்ச வீடு மற்றும் இடிதாங்கி நீண்டகாலமாக இல்லாது கடல் பகுதியில் அபாயகரமான நிலையில் மீனவர்கள் கடல் மீன்பிடி நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் அண்மைய காலப்பகுதியில் இடி மின்னலினால் இரண்டு உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் யாழ் மாவட்ட கடல் பரப்பில் மன்னார் மாவட்ட மீனவர்கள் இரவு நேரத்தில் கடலட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவித்து, யாழ் மாவட்ட 12 மீனவச் சங்கங்கள் ஊடாக பிடிக்கப்பட்டு, கடல் தொழில் அமைச்சின் ஊடாக நீதி மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டு,

12 மீனவச் சங்கங்களுக்கும் எதிராக நடைபெற்றுவரும் வழக்கை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் விடயத்திற்கு பொறுப்பான கடல் தொழில் அமைச்சுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.