நுண்கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிக தடை - ரணில்.! - THAMILKINGDOM நுண்கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிக தடை - ரணில்.! - THAMILKINGDOM
 • Latest News

  நுண்கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிக தடை - ரணில்.!

  நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிகமாக கிளி நொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிர தேசங்களில் அறவிடுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளாா்.

  நேற்று கிளிநொச்சி மாவட்டச் செய லகத்தில் நடைபெற்ற சந்திப்பில் இவ் வாறு  தெரிவித்துள்துடன் வெள்ளத் தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை முழு மையாக இழந்து வருமான மற்று காணப்படுகின்றனர்.

  இவர்களில் பலர் முகாம்களில் தங்கி யுள்ள நிலையில் அவர்களிடம் சென்று நுண்கடன் அறிவிடும் செயற் பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதமரின் கவனத்திற்கு  தெரிவிக்கப்பட் டுள்ளது.

   வெள்ளத்தினால் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளமையால் விவசாயிகளி னால் பெறப்பட்ட கடன்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதனையடுத்தே பிரதமர் தற்காலிகமாக நுண் கடன்கள் மற்றும் வங்கிகடன்களை தற் காலிகமாக அறவிடுவதற்கு தடை விதிக்குமாறு பணித்துள்ளார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: நுண்கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிக தடை - ரணில்.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top