Breaking News

மைத்திரி-மஹிந்த இணைந்ததின் வலுவான பின்னணியில் குற்றச்சாட்டு.!

மைத்திரிபால சிறிசேன இரண்டாவது முறையும் ஜனாதிபதி பதவியில் அமர வேண்டும் என்ற எண்ணத்தில், தமது வழக்கு விசாரணைகளில் இருந்து தப் பித்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மஹிந்த ராஜபக்சவுடன் இணை ந்து ஆட்சியமைத்துள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணி குற்றம் சுமத்தியுள் ளது.

நல்லாட்சி அரசாங்கத்தால் உருவாக் கப்பட்ட விசேட மேல் நீதிமன்றத்தை இல்லாதொழிப்பதாக, மஹிந்தவாதி கள் கூறி வந்ததும் இந்த நோக்கத் திலேயே என, ஐக்கிய தேசிய முன் னணி அரசாங்கத்தில் நீதி அமைச்ச ராக இருந்த தலதா அத்துகோரல தெரி வித்துள்ளார்.

ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சி, ஆரம் பித்துள்ள தொடர் வாகன பேரணியின் இரண்டாவது நாள், பேரணியில் பங் கேற்று கருத்து வெளியிடுகையில் முன்னாள் அமைச்சர் இவ் விடயத்தைத் தெரிவித்துள்ளாா்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிசேனவிற்கு மீண்டும் ஒரு முறை ஜனாதிபதியாக வேண்டும் என்ற எண் ணத்திலேயே கடந்த 26ஆம் திகதி இந்த மாற்றத்தை செய்தார் என்பதே எனது கருத்து. நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதாக மஹிந்த ராஜ பக்சவும் தெரிவித்துள்ளாா்.

எனினும் அந்த கதிரையில் அமர்ந்த பின்னர் அவர் மீண்டும் எப்படியாவது ஜனாதிபதியாக வேண்டும் என்ற எண்ணத்திலேயே செயற்பட்டார். மைத்திரி பால சிறிசேனவிற்கும் அதே எண்ணம் தோன்றியுள்ளது.

அதனைவிட கடந்த 2015ஆம் ஆண்டு ஊழல், கொலை, கொள்ளைகளை ஒழித் துக்கட்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஒன்றிணைந்து செயற்பட் டோம்.

விளையாட்டு வீரர்கள் படுகொலை செய்யபட்டார்கள். ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டார்கள். இவை அனைத்திற்கும் சுயாதீனமான ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டுமென நாங்கள் தீர்மானித்தோம். அதற்கமைய விசேட மேல் நீதிமன்றமும் உருவாக்கப்பட்டது.

இதற்கு மைத்திரிபால சிறிசேனவும் உடன்பட்டார். எவ்வாறெனினும் மைத்திரி பால சிறிசேனவுக்கு மீண்டும் ஜனாதிபதியாக வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. மஹிந்த ராஜபக்சவிற்கு அவரையும், அவர் சார்ந்த உறவினர் களையும், நண்பர்களையும் வழக்கு விசாரணைகளில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்கான தேவை ஏற்பட்டுள்ளது.

இந்த நோக்கங்களுடனேயே இருவரும் இணைந்து கொண்டுள்ளனர். விசேட மேல் நீதிமன்றத்தை இல்லாது செய்யப்போவதாகவும் மஹிந்த தரப்பினர் கடந்த காலங்களில் தெரிவித்ததன் ஊடாகவும் அவர்களது நோக்கம் தெளி வாக புலம்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.