இராணுவ வசமிருந்த மேலுமொரு தொகுதி காணி மக்களிடம் கையளிப்பு.! - THAMILKINGDOM இராணுவ வசமிருந்த மேலுமொரு தொகுதி காணி மக்களிடம் கையளிப்பு.! - THAMILKINGDOM
 • Latest News

  இராணுவ வசமிருந்த மேலுமொரு தொகுதி காணி மக்களிடம் கையளிப்பு.!

  வவுனியா மாவட்டத்தில் இதுவரை காலமும் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் தனியார் காணிகளின் மேலுமொரு தொகுதி இராணுவத்தினரால் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

  இக் காணிகளை கையளிக்கும் உத்தி யோகபூர்வ நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் தலைமையில் இன்று (22) முற்பகல் வடக்கு ஆளுநர் செயலகத்தில் நடை பெற்றுள்ளது.

  வன்னி இராணுவக் கட்டளை தலை மையகத்தினை பிரதிநிதித்துவம் செய்து 56ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமட்டன்பிட்டிய காணி விடுவிப்பிற்கான பத் திரத்தை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிடம் கையளித்துள்ளாா்.

  ஆளுநர் அதனை வவுனியா அரச அதிபர் ஐ.எம்.ஹனீபாவிடம் கையளித்தார் இதனடிப்படையில் வன்னி இராணுவ கட்டளைத் தலைமையகத்தின் கீழ் வவு னியா மாவட்டத்தில் 40.74 ஏக்கர் அரச காணிகளும் 13.64 ஏக்கர் தனியார் காணி களும் விடுவிக்கப்பட்டுள்ளது.

  இதற்கிடையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட் டங்களில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்த சுமார் 264 ஏக் கர் தனியார் காணிகளும்,

  இராணுவத்தின் கீழ் இருந்த நான்கு பண்ணைகளுக்கு சொந்தமான 1099 ஏக்கர் அரச காணிகளையும் விடுவிப்பதற்கான சான்றுப் பத்திரங்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவால் முல்லைத்தீவு முள் ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையிலான தேசிய போதைத்தடுப்பு வாரத்தன் ஆரம்ப நிகழ் வில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

  அக் காணிகள் வடக்கு ஆளுநர் ஊடாக மாவட்ட செயலாளர்களிடம் கைய ளிப்பட்டுள்ளன. 

  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: இராணுவ வசமிருந்த மேலுமொரு தொகுதி காணி மக்களிடம் கையளிப்பு.! Rating: 5 Reviewed By: tamil2017
  Scroll to Top