ஜனாதிபதி நினைத்தால் மட்டுமே தேர்தல் - அனுர பிரியதர்ஷன - THAMILKINGDOM ஜனாதிபதி நினைத்தால் மட்டுமே தேர்தல் - அனுர பிரியதர்ஷன - THAMILKINGDOM
 • Latest News

  ஜனாதிபதி நினைத்தால் மட்டுமே தேர்தல் - அனுர பிரியதர்ஷன

  தேர்தல் எப்போது நடத்த வேண்டுமெனத் தீர்மானிக்கும் உரிமை ஐக்கிய தேசி யக் கட்சிக்கு கிடையாது. ஜனாதிபதி தேர்தல் எப்போது நடத்த வேண்டுமென அரசியலமைப்பில் குறிப்பிட்டதற்கமைய ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமெ னத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  அதற்கு முன்னர் ஜனாதிபதி தேர் தலை நடத்த வேண்டுமென ஜனாதி பதி கருதினால் தேர்தலை நடத்த முடி யுமென பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித் துள்ளாா்.

  பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையில் மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளாா்.

  அரசாங்கம் மக்களின் தேவைகளை அறிந்து நாட்டை நிர்வகிக்க வேண்டும். கடந்த அரசாங்கத்தில் மக்கள் தேர்தல் உரிமையினை பெற்றுக்கொள்வதற் காக வீதியில் இறங்கி போராடும் நிலைமை காணப்படவில்லை.

  ஆகவே அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் அனைத்திற்கும் தேர் லின் ஊடாகவே நிரந்தர தீர்வினை பெறமுடியும். ஆகவே மாகாணசபை தேர் தலை நடத்த பல்வேறுப்பட்ட அமைப்புக்கள் முன்னெடுக்கின்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் பொதுஜன பெரமுன முன்னணியினர் என்ற அடிப்படை யில் பூரண ஒத்துழைப்பை வழங்குவோமெனத் தெரிவித்துள்ளாா். 

  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: ஜனாதிபதி நினைத்தால் மட்டுமே தேர்தல் - அனுர பிரியதர்ஷன Rating: 5 Reviewed By: tamil2017
  Scroll to Top