Breaking News

வடக்கில் சில காணிகள் நாளை விடுவிக்கவுள்ளதாக தெரிவிப்பு.!

முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் போதைப்பொருள் தடுப்புவாரத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நாளை (21) முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளுள் மேலும் சுமார் 1,200 ஏக்கர் காணிகள் நாளை திங்கட் கிழமை விடுவிக்கப்படவுள்ளன. காணிகளை விடுவிப்பதற்கான நட வடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு பாதுகாப்புத்துறைக்கு ஜனாதிபதி விடுத்த பணிப்புரைக்கமைய வடக் கில் தனியார், மற்றும் அரச காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளன.

கடந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் காணிகளை விடுவிக்க வேண்டு மென ஜனாதிபதி படைத்தரப்பினருக்குப் பணிப்புரை வழங்கியிருந்தார். அதற் கமைய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களிலுள்ள 1208.27 ஏக்கர் தனியார், மற்றும் அரச காணிகள் நாளை விடுவிக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய நாளை முதல் நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளிலும் போதைப்பொருள் தடுப்பு வாரம் ஆரம்பமாகிறது.

21 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை யிலான காலப்பகுதியை பாடசாலை போதைப்பொருள் தடுப்பு வாரமாக பிரக டனம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு நாளை முல்லைத்தீவு வித்தியா னந்தா கல்லூரியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடை பெறவுள்ளதுடன் இந்நிகழ்வின்போதே காணி விடுவிப்பு நிகழ்வும் நடைபெற வுள்ளது.

முல்லைத்தீவு அரச அதிபர், மன்னார் அரச அதிபர், வவுனியா அரச அதிபர், ஆகியோருடன் கிளிநொச்சி இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ரெல்ப் மற்றும் முல்லைத்தீவு இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு ஆகியோர் நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.