தமிழகம் வரும் மோடிக்கு கறுப்புக் கொடி ; களத்தில் குதித்த வைகோ.! - THAMILKINGDOM தமிழகம் வரும் மோடிக்கு கறுப்புக் கொடி ; களத்தில் குதித்த வைகோ.! - THAMILKINGDOM
 • Latest News

  தமிழகம் வரும் மோடிக்கு கறுப்புக் கொடி ; களத்தில் குதித்த வைகோ.!

  தமிழகத்தையும், தமிழர்களையும் தொடர்ந்து வஞ்சிக்கும் வகையில் செயற் படும் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும் சமயத்தில் அவரது வருகையை எதிர்த்தும், மத்திய அரசுக்கு எதிரான எங்களது உணர்வுகளை வெளிக்காட்டும் விதத்திலும் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடை பெறுமென அதிரடியாக தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

  தஞ்சையில் நடைபெற்ற நிகழ்வு ஒன் றில் கலந்துகொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "தூத்துக் குடி துப்பாக்கிச்சூடு, கஜா புயல் சேதம் உள்ளிட்டவை குறித்து இரங்கல் கூட தெரிவிக்காத, பாதிப்புகளை காண நேரில் வருகை தராத இந்த தேசத்தின் பிரதமர் மோடி, எதிர்வரும் 27 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாக அறிகிறோம்.

  அப்போது மத்திய பாஜக அரசுக்கு எதிரான ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்ப் புணர்வினை வெளிக்காட்டும் விதத்தில் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும்.

  இப் போராட்டத்திற்கு அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு அளிக்க வேண்டும்" என தெரிவித்தார். முன்னதாக, உச்ச நீதிமன்ற உத்தரவின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த் திய சமயத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் (#GO BACK MODI) அனைத்து கட்சிகளால் நடத்தப்பட்டதும், அத் தகைய போராட்டத்தின் காரணமாக பிரதமர் தரை வழிப்பயணம் மேற்கொள் ளாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. 

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: தமிழகம் வரும் மோடிக்கு கறுப்புக் கொடி ; களத்தில் குதித்த வைகோ.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top