எமது போராட்டம் முஸ்லீம் மக்களுக்கு எதிரானதல்ல; ஹர்த்தாலுக்கு அழைப்பு! - THAMILKINGDOM எமது போராட்டம் முஸ்லீம் மக்களுக்கு எதிரானதல்ல; ஹர்த்தாலுக்கு அழைப்பு! - THAMILKINGDOM
 • Latest News

  எமது போராட்டம் முஸ்லீம் மக்களுக்கு எதிரானதல்ல; ஹர்த்தாலுக்கு அழைப்பு!

  கிழக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அவர்களின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் எம்.எல். ஏ.எம். ஹிஸ்புல்லா அவர்களின் நிய மனம் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் மத்தியில் அதிகளவான பயத்தினை யும் பதற்றத்தினையும் ஏற்படுத்தி யுள்ளதாகவும் இந் நியமனத்தினை கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஏற்க வில்லை.

  என்பதை ஜனாதிபதி அவர்களுக்கும் நாட்டுமக்களுக்கும் தெரிவிக்கும் வகை யில் எதிர்வரும் 25.01.2019 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் முழுவ தும் அமைதி வழி போராட்டம் நடைபெறவுள்ளதாகவும் மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

  மக்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்காக 25ம் திகதி வெள்ளிக்கிழமை மக்கள் வீட்டை விட்டு வெளியே வராது வீதியை வெறிச்சோட்டும் போராட் டத்தில் ஈடுபடுமாறும் கேட்டுள்ளனர்.

  புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்களை முஸ்லீம் என்ற காரணத்திற்காக நாங்கள் எதிர்க்கவில்லை அவர் தமிழ் மக் கள் விடயத்தில் ஒரு இனவாதியாக செயற்பட்டுள்ளார்.

  எமது போராட்டம் முஸ்லீம் மக்களுக்கு எதிரானதல்ல அவர்மீது பின்வரும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. தமக்கு வழங்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் பதவியை பயன்படுத்தி வாழைச்சேனையில் இருந்த காளிகோயில் காணியை பள்ளிவாசல் மற்றும் சந்தையாக புனர மைத்துள்ளேன்.

  என பேசியதையும் அதனை நடைமுறைப்படுத்தியுள்ளமைக்கும் மற்றும் தனக்கு சார்பாக நீதிமன்ற தீர்பை மாற்ற நீதிபதியை மாற்றினேன் என பேசி யமை வட கிழக்கு இணைக்கப்படால் இரத்த ஆறு ஓடும் என பாராளுமன்றில் பேசியமை என பல குற்றச்சாட்டுக்களை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அவர்கள் மீது முன்வைத்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினர் அறிக்கையொன்றை விடுத்துள் ளனா்.

  அவ் அறிக்கை மூலமாக பொருத்தமில்லாத ஒருவரை கிழக்கு மாகாண ஆளு நராக நியமிப்பதை எதிர்ப்பதாகவும் எனக் குறிப்பிட்டு ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: எமது போராட்டம் முஸ்லீம் மக்களுக்கு எதிரானதல்ல; ஹர்த்தாலுக்கு அழைப்பு! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top