Breaking News

மகிந்த தலைமையிலான எதிரணிக்குள் பிளவுகளைத் தீண்டும் கோத்தா.!

இவ்வருட இறுதியில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியி டுவதில் தனது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச வெளிப் படுத்தியதை அடுத்து அவரது மூத்த சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான எதிரணிக்குள் கடுமையான பிளவு களை ஏற்படுத்தியுள்ளது.

"மக்கள் தயாரென்றால் நானும் தயார் "என கடந்தவாரம் கோத்தாபய பகி ரங்கமாக அறிவித்த பின்னரும் அரசி யலில் பேரார்வம் கொண்ட அவரின் சகோதரர்களுக்கு ஜனாதிபதி தேர்த லில் போட்டியிடுவதில் உள்ள நாட் டம் தணிந்ததாக இல்லை.

முன்னாள் பாராளுமன்ற சபாநாயகரான இன்னொரு மூத்த சகோதரர் சமால் ராஜபக்ச தம்பியாரின் அறிவிப்பு வந்த ஒரிரு தினங்களில் " நானும் போட்டி யிடத் தயாராயிருக்கிறேன்" என்று கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது.

ஜனாதிபதி தேர்தல் களத்தில் இறங்கும் கோதாபயவின் விருப்பத்தினால் ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் விசனமடைந்திருப்பதாக ஸ்ரீலங்கா சுதந் திர கட்சிக்குள் அவரது நெருக்கமானவா்கள் தெரிவித்துள்ளாா்.

செல்வாக்குமிக்க ராஜபக்சாக்களின் ஆதரவுடன் இரண்டாவது பதவிக் காலத் துக்கு மக்களின் ஆணையைப் பெறுவதற்கு அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வியூகங்களை ஜனாதிபதி சிறிசேன வகுத்துள்ளாா். 

ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சியின் வேட்பாளர் ஜனாதிபதி சிறிசேனவே என்று கடந்த வெள்ளிக்கிழமை கூட கட்சியின் புதிய பொதுச்செயலாளரான தயாசிறி ஜெயசேகர செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளாா்.

பொது வேட்பாளர் ஒருவரை ஆதரிக்கும் உத்தேசம் எதுவும் தங்களுக்கு இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். அதேவேளை, ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர் குறித்து ஊகங்கள் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு எதிரணி அரசியல்வாதிகளை சுதந்திர கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்.பி.திசாநாயக்க கேட்டிருந்தார்.

கோத்தாபயவின் பிரவேசம் குறித்து திசாநாயக்கவிடம் கேட்டபோது " அது குறித்து பேசாமல் இருப்பதே சிறந்தது" எனாறு பதிலளித்தார். ஜனாதிபதி தேர் தல் களத்தில் இறங்குவது குறித்து கடந்தவாரம்தான் கோதாபய நேரடி யாக கருத்துரைத்துள்ளாா் என்றபோதிலும், அவர் தனது உத்தியோகபூர்வமற்ற பிரசாரத்தை கொழும்பு சங்கிரி லா ஹோட்டலில் கடந்த மே மாதத்தில் தொடங்கியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் அவரின் முதல் வழக்கு விசாரணை செவவாய்க்கிழமை ஆரம்பமாகவிருப்பதற்கு முன்னதாக அவருக்கு ஆதர வான பல சமூக வலைத்தளங்கள் " 2020 கோதா " என்ற பிரசார சலோகத்தை வெளியிட்டிருக்கின்றன.

காலஞ்சென்ற தனது பெற்றோருக்கு நினைவாலயம் ஒன்றை சொந்த ஊரான வீரகெட்டியவில் நிறுவுவதற்கு 4 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதியை கோத்தாபய முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் விசேட நீதிமன்றத்தின் முதன் முதலான விசாரணை செவ்வாய்க்கிழமை ஆரம்ப மாகவுள்ளது.

கோத்தாபய தனது அமெரிக்கப் பிரஜாவுரிமையை இன்னமும் துறக்கவில்லை என்பதால் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான தகு தியை இன்னமும் பெறவில்லை.

அமெரிக்கப் பிரஜாவுரிமையை கைவிடுவதற்கான நடைமுறைகளை இரு மாதங்களில் பூர்த்திசெய்துவிட முடியும் என்று முன்னர் அவர் கூறியிருந்தார். ஆனால், வெளிநாட்டுப் பிரஜாவுரிமையை கைவிடுவதென்பது தனது தனிப் பட்ட விவகாரம் என்று கடந்தவாரம் செய்தியாளர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

 அமெரிக்கப் பிரஜாவுரிமையை தான் துறக்கவிரும்பினால் அதை வாஷிங்டன் தடுக்கமுடியாது என்று வாதிட்ட அவர் அமெரிக்காவை ஜனநாயகத்தி்ன் தந்தை என்று வர்ணித்ததுடன் " அமெரிக்கப் பிரஜாவுரிமையுடன் சேர்த்து ஒரு வரைக் கட்டிப்போட முடியாது " எனத் தெரிவித்துள்ளாா்.

 ஆனால், அமெரிக்கப் பிரஜாவுரிமையைக் கைவிடுவது காலத்தை எடுக்கின்ற ஒரு செயன்முறையாகும் என்றும் அந்த பிரஜாவுரிமையைக் கைவிட விரும்பு கிறவருக்கு எதிராக வழக்கு விசாரணை எதுவும் இல்லாமல் இருப்பதுடன் வரி நிலுவைகளும் இல்லாமல் இருந்தால் மாத்திரம் அதைச்செய்யமுடியுமென இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.