Breaking News

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி விரைவில்!

2018-2019 ஆண்டு பல்கலைக்கழக கல்விக்காக மாணவர்களை உள்வாங்குவ தற்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படுமென்று பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை 31 ஆயிரத்து 500 மாண வர்கள் பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ள எதிர்பார்த்தி ருப்பதாக ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் பி.எஸ். எம்.குணரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கை கடந்த வருடத்தி லும் பார்க்க சுமார் 1500 பேர் வரை அதி கமானதாகும். அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கற்கை நெறிகள் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட் டார்.

மேலும் பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற்கொண்டு மூடப்பட்ட பல் கலைக் கழகங்கள் அடுத்த வாரத்தில் மீண்டும் ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளாா்.

பாதுகாப்புப் பிரிவு - பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள் ளது. பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிக்கும் அதிகாரம் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கான, பல்கலைக்ககழக உபவேந்தர்க ளுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.