நாங்கள் அனைவரும் வெற்றியின் நாயகர்கள் ;யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி - THAMILKINGDOM நாங்கள் அனைவரும் வெற்றியின் நாயகர்கள் ;யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி - THAMILKINGDOM
 • Latest News

  நாங்கள் அனைவரும் வெற்றியின் நாயகர்கள் ;யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி

  முப்பது வருட யுத்தத்தின் பின் அதிலிருந்து மீண்டு இருக்கின்றோம். ஆனால் தற்போது யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையில் தற்போது பயங்கரவாத தாக்குதல் ஒன்றுக்கு எமது நாடு முகங்கொடுத்துள்ளது.

  அதற்குத் தேசத்தின் பாதுகாவலர்கள் என்ற ரீதியில் நாம் ஒன்றுபட்டு பயங் கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை களை மேற்கொள்ளவேண்டும். என யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜா் ஜெனரல் தா்சன ஹெட்டியா ராட்சி தெரிவித்துள்ளாா்.

  இராணுவத்தின் யாழ் மாவட்ட படை களின் யுத்த வெற்றி கொண்டாட்டம் இன்று துரையாப்பா விளையாட்டு அரங் கில் இடம்பெற்றது. இன்று காலை 8.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத் திலிருந்து ஆரம்பமான இராணுவத்தின் அணிவகுப்புப் பேரணி யாழ் துரை யப்பா விளையாட்டரங்கினை சென்றடைந்ததுடன் அங்கு நிகழ்வுகள் இடம் பெற்றன.

  இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

  அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில், நாங்கள் அனைவரும் வெற்றியின் நாயகர்கள். இந்த வெற்றியினையிட்டு ஒவ்வொரு இராணுவ வீரரையும் கௌரவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

  தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் சந்தோசமாக எந்தவித அச்சமும் இன்றி வாழ பாதுகாப்பு வீரர்கள் என்ற வகையில் நாங்கள் எங்கள் கடமையினை ஆற்ற வேண்டும்.

  எமது நாட்டுக்குள் தற்போது அச்சுறுத்தலாக இருந்த பயங்கரவாதிகள் தற் போது தோற்கடிக்கப்பட்டுள்ளனா். இதற்கு எல்லாம் வல்ல இறைவன் துணை புரிந்திருக்கின்றார்.

  மேலும், நாங்கள் ஒற்றுமையுடன் எமது எதிர்காலத்தினை கொண்டு செல்வ தற்கு எல்லாம் வல்ல ஸ்ரீமாபோதி ஆசீர்வாதங்கள் எப்போதும் கிடைக்கும். முப்பது வருடங்களாக நடைபெற்ற கொடூர யுத்தத்திலிருந்து மீண்டு இருக் கின்றோம்.

  ஆனால் தற்போது, யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையில் பயங்கர வாத தாக்குதல் ஒன்றிக்கு முகங்கொடுத்துள்ளோம். அதற்குத் தேசத் தின் பாதுகாவலர்கள் என்ற ரீதியில் நாம் ஒன்றுபட்டு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

  அதற்கான அதிகாரங்கள் தற்போது எமக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருட யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு இந்த ஆண்டு ஒரு தாசப்த்த காலம் பூர்த்தியாகியுள்ளது. இதனைவிட்டு இங்குள்ள ஒவ்வொரு வீரர்களும் கௌரவம் கொள்ள வேண்டும் என்றார்.


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: நாங்கள் அனைவரும் வெற்றியின் நாயகர்கள் ;யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top