Breaking News

1992 இல் நடைபெற்ற 5 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்

1992 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்தாவது உலகக் கிண்ணத் தொடரில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்தி முதல் தடவையாக சம்பியனானது.

அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடு களில் 1992 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி தொடக்கம் மார்ச் 25 ஆம் திகதி வரை நடைபெற்றது.

  • கிண்ணத்தின் பெயர் - பென்சன் அன்ட் எட்ஜசு (Benson & Hedges cup) 


  •  18 மைதானங்களில் மொத்தமாக 39 போட்டிகள் நடைபெற்றது. 


  • 9 அணிகள் கலந்து கொண்டன (நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென்னாப் பிரிக்கா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத்தீவுகள், இந்தியா, இலங்கை மற்றும் சிம்பாப்வே) இனவெறி கொள்கையால் தென் ஆப் பிரிக்கா மீது விதிக்கப்பட்டிருந்த 21 ஆண்டு கால தடை நீக்கப்பட்டதால் அந்த அணி முதல்முறையாக உலக கோப்பையில் சேர்க்கப்பட்டது. 



  •  அணி வீரர்கள் வழக்கமான வெள்ளை நிற சீருடையில் இருந்து பெயர் பொறிக்கப்பட்ட வர்ணமயமான உடைக்கு மாறினர். 


  • முதல்முறையாக வெள்ளை நிற பந்து பயன்படுத்தப்பட்டது. 


  •  பகல்-இரவு ஆட்டங்கள் முதல்முறையாக அரங்கேறின. 


  • முதல் 15 ஓவர்களில் குறிப்பிட்ட வட்டத்திற்கு வெளியே 2 களத் தடுப்பாளர்கள் மாத்திரம் நிற்கும் விதியும் அறிமுகம். 


  • 9 அணிகள் கலந்துகொண்டமையினால் போட்டி அட்டவணை மாற்றப் பட்டு ரவுண்ட் ராபின் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு அணி யும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோதின ரவுண்ட் ராபின் சுற்று முடிவு : நியூஸிலாந்து அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளை யாடி 7 இல் வெற்றியை யும் ஒரு போட்டியில் தோல்வியையும் சந்தித்து 8 புள்ளிகளுடன் முதல் இடம்.  


இங்கிலாந்து அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றியையும், 2 தோல்வியையும் சந்தித்து 11 புள்ளிகளுடன் இரண்டாவது இடம்.

தென்னாப்பிரிக்கா அணி மொத்தமாக 8 போடிகளில் விளையாடி 5 இல் வெற் றியையும், 3 இல் தோல்வியையும் சந்தித்து 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடம்.

பாகிஸ்தான் அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 4 இல் வெற் றியையும், 3 இல் தோல்வியையும் சந்தித்து 9 புள்ளிகளுடன் நான்காவது இடம்.

அவுஸ்திரேலியா அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 4 இல் வெற் றியையும், 4 இல் தோல்வியையும் சந்தித்து 8 புள்ளிகளுடன் ஐந்தாவது இடம்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 4 இல் வெற்றியையும், 4 இல் தோல்வியையும் சந்தித்து 8 புள்ளிகளுடன் ஆறாவது இடம்.

இந்திய அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 2 இல் வெற்றியையும், 5 இல் தோல்வியையும் சந்தித்து 5 புள்ளிகளுடன் ஏழாவது இடம்.

இலங்கை அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 2 இல் வெற்றி, 5 இல் தோல்வியையும் சந்தித்து 5 புள்ளிகளுடன் எட்டாவது இடம்.

சிம்பாப்வே அணி மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி, 7 இல் தோல்வியையும் சந்தித்து 2 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடம்.