Breaking News

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் மாவை.சேனாதிராசா

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் இந்திய பிர தமரிடம் எடுத்துரைக்கவுள்ளோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலை வரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சோ.மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளாா். 

இலங்கைக்கு வருகை தருகின்ற இந் தியப் பிரதமர் தமிழ்த்தேசியக் கூட் டமைப்பை சந்திக்கின்றார். இச் சந்திப் பில் எத்தகைய விடையத்தை கலந் துரையாடவுள்ளீர்கள் எனக்கேட்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிணை மேற்கொண்டு குறுகிய நேரப் பயண மாக இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி நாளை இலங்கை வருகின்றார். மூன்று மணித்தியாலங்கள் தங்கியிருக்கும் இந்தியப் பிரதமர் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, பிரதமர் ரணில்விக்கிரம சிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் தமிழ்த்தேசியக் கூட் டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் உறுப்பி னர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு இந்தியாவின் பிரதமராக இரண்டாவது தடவையாக பதவியேற்று முதற் தட வையாக இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இலங்கையில் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் சர்வதேச பயங்கரவாதத் தாக்குதலானது இலங்கை்கு மட்டுமல்ல அயல் நாடான இந்தியாவிற்கும் அது அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது.

இத் தாக்குதலின் பின்னரான சூழல் அனைத்து இனங்களுக்கிடையிலும் மதங் களுக்கிடையிலும் அது மட்டுமன்றி அரசியலிலும் பல மாற்றங்களை ஏற்ப டுத்தி வருகின்றது. இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலானது இந்தி யாவின் பாதுகாப்பிலும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றது.

இவ்வாறான நிலையில் நாளை வரும் பிரதமர் மோடியுடன் நீண்ட காலமா கவே இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு விடையத்தில் தீர்க்கமான முடி வினை எடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் குறிப்பாக இலங்கை யிலுள்ள சிறுபான்மை மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தாக்குதல் கள் அடக்குமுறைகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளோம்.

இலங்கையில் இனப்பிரச்சினை தீர்வினை பெற்றுக்கொள்வதன் மூலம் தான் இந்த நாட்டில் சர்வதேச பயங்கரவாதத்தத் தாக்குதல்கள் இடம்பெறாது தடுக்க முடியும் என்ற விடையத்தினை நாம் சுட்டிக்காட்டுவோம்.

நீண்ட காலமா கவே இந்த நாட்டில் இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாத நிலையில் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் இனப்பிரச்சினைக்கான தீர்வுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்போது அவை கை விடப்பட்டதாகவே உள்ளது.

இந்த நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வினை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலேயே எமது பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் பெறும் என தெரி வித்துள்ளாா்.