மரண தண்டனையை முற்றாக நிறுத்த வேண்டும் - கூட்டமைப்பு - THAMILKINGDOM மரண தண்டனையை முற்றாக நிறுத்த வேண்டும் - கூட்டமைப்பு - THAMILKINGDOM

 • Latest News

  மரண தண்டனையை முற்றாக நிறுத்த வேண்டும் - கூட்டமைப்பு

  நாட்டில் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களைக் கட்டுப் படுத்த வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். எனினும் அதற் காக மீண் டும் மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவது ஏற்புடையதல்ல. எனவே முற்றாக மரணதண்டனையை இல்லாதொழிக்கும் வகையில் சட்டங்களில் மறுசீரமைப்புக்களை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் பாரா ளுமன்றத்தில் மேற்கொள்வோம் என்று கூட்டமைப்பு உறுதியளித்துள்ளது. 
  போதைப்பொருள் குற்றச்செயல்களு டன் தொடர்புடைய மரணதண்ட னைக் கைதிகள் நால்வருக்கு அத் தண்டனையை விரைவில் நிறை வேற்றவிருப்பதாகவும், அதற்குரிய அனுமதிப்பத்திரங்களில் கையெழுத் திட்டு விட்டதாகவும் கடந்தவாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக அறிவித்த மையைத் தொடர்ந்து சர்வதேச நாடுகள், மனித உரிமை அமைப்புக்கள் பலவும் அதற்குக் கடும் கண்டனங்களை வெளியிட் டிருந்தன.

  இந்நிலையில் சுமார் 40 வருடங்களுக்கும் அதிகமான காலம் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த மரணதண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனா திபதி சிறிசேன மேற்கொண்டிருக்கும் தீர்மானத்தைக் கண்டித்து மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

  அதில் மரணதண்டனையை நீக்குவதற்கான சட்ட மறுசீரமைப்புக்களை பாரா ளுமன்றம் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது. இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் எத்தகைய பாத்திரத்தை வகிக்கும் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல் வம் அடைக்கலநாதனிடம் வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்துள் ளாா்.

  போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்று வதில் அக்கறையாக இருக்கின்ற ஜனாதிபதி, 15 வருடங்களுக்கும் அதிகமான காலம் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் தொடர்பில் முதலில் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று செல்வம் எம்.பி சுட்டிக் காட்டி யுள்ளாா்.

  விசாரணைகள் ஏதுமின்றி பல அரசியல்கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட் டிருக்கிறார்கள். சிலருக்கு விசாரணைகள் இடம்பெற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. மேலும் சில கைதிகள் தொடர்பில் விசாரணைகள் பல வருடங்களாக இடம்பெற்று வருகின்றது.

  இவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. அதுகுறித்து அவர் சிந்திக்க வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மரண தண்டனையை முற்றாக நிறுத்த வேண்டும் - கூட்டமைப்பு Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top