பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை.! - THAMILKINGDOM பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை.! - THAMILKINGDOM

 • Latest News

  பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை.!

  சர்வதேச விமான நிலையமாக பலாலி விமான நிலைத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற் றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

  சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழ் கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தை ஆரம்பித்து வைத்து பிரதி அமைச்சர் உரையாற்றினார். இந்த பணிக்காக பலாலி விமான நிலையம் நவீன மயப்படுத்தப்படும்.

  இதற்கான நடவடிக்கைகள் அடுத்த மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் பிரதி அமைச்சர் குறிப் பிட்டார். இரண்டு அல்லது மூன்று மாதக் காலத்திற்குள் இந்த நிர்மாண பணி கள் பூர்த்தி செய்யப்படுவதுடன் இந்த விமான நிலையம் சிவில் விமான நிலை யமாக முன்னெடுக்கப்படுமெனத் தெரிவித்துள்ளாா்.

  இலங்கையில் 15 விமான நிலையங்கள் உண்டு. இவற்றில் 2 சர்வதேச விமான நிலையங்கள் ஆகும். மத்தள விமான நிலையம் தற்பொழுது செயற்பட்டு வரு கின்றது. இலங்கை சிவில் விமான சேவை எட்டு தெற்காசிய மத்திய நாடு களில் முதலிடத்தில் நடைபெற்றுள்ளது.

  இது ஆசிய நாடுகள் மத்தியில் ஆறாவது இடத்திலும் உலக நாடுகள் மத்தியில் 19 ஆவது இடத்திலும் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top