துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பணம் கொள்ளையடிப்பு.! - THAMILKINGDOM துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பணம் கொள்ளையடிப்பு.! - THAMILKINGDOM

 • Latest News

  துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பணம் கொள்ளையடிப்பு.!

  ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு வர்த்தக நிலை யத்தில் உள்ளவர்களை முழந்தாலிடச் செய்து, வர்த்தக நிலையத்தின் பெறு மதிமிக்க பொருட்களையும் மூன்று இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் ஹல்துமுள்ளையில் நேற்று 2019ல் மாலை 6 மணியளவில் நடைபெற்றுள்ளது.

  மோட்டார் சைக்கிளில் தலைக்கவச முகமூடியணிந்த இருவர் ஹல்து முள்ளை பிரபல வர்த்தக நிலைய முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தம்மிடமிருந்த துப்பாக்கியை எடுத்து ஆகாயத்தை நோக்கி மூன்று முறை துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்டனர்.

  அதையடுத்து வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த அவர்கள் துப்பாக்கி முனை யில் பயமுறுத்தப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர், வர்த்தக நிலையத் தில் சேவையாற்றும் ஒரு பெண் மற்றும் வாடிக்கையாளர்கள் இருவர் ஆகி யோரை முழந்தாலிடச் செய்துள்ளனா். 

   அதையடுத்து வர்த்தக நிலையத்திற்குள் புகுந்தவர்கள் வர்த்தக நிலையத்தின் வைப்பகத்தை திறந்து அதனுள் இருந்த மூன்று இலட்சத்து இருபத்தையா யிரம் ரூபா பணத்தையும் வர்த்தக நிலையத்தின் பெறுமதிமிக்க பொருட் களையும் எடுத்துக் கொண்டு அதே மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.

  அவர்கள் சென்றதும் வர்த்தக நிலைய உரிமையாளர், தமக்கேற்பட்ட விட யத்தை, ஹல்துமுள்ளை பொலிஸ் நிலையம் சென்று புகார் செய்தார். இப் புகாரின் அடிப்படையில், ஹல்துமுள்ளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.த. சில்வா தலைமையிலான குழுவினர், ஏற்பட்ட கொள்ளை குறித்து தீவிர புலன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.

  இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. குறிப்பிட்ட மோட்டார் சைக்கிள் இலக்கத்தகடில்லாமலேயே இருந்ததாக பொலிஸ் நிலையத்தில் செய்யப் பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பணம் கொள்ளையடிப்பு.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top