Breaking News

கட்சி செய­லா­ளர்­களை இன்று சந்­திக்­கிறார் மஹிந்த தேசப்­பி­ரிய.!

சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரி­ய­வுக் கும் அர­சியல் கட்சி செய­லா­ளர்­க­ளுக்கும் இடை­யி­லான முக்­கிய சந்­திப்பு இன்று பிற்பகல் 2.30 மணி­ய­ளவில் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவில் நடைபெற வுள்ளது.

காலம் தாழ்த்­தப்­பட்டு வரு­கின்ற மாகாண சபைத் தேர்­தல்கள் மற்றும் எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தல் என்­பன குறித்து இச் சந்­திப்பில் விஷேட கவனம் செலுத்­தப்­ப­ட­வுள்­ளது.

இச் சந்­திப்பு தொடர்பில் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் சட்ட பணிப்­பாளர் நிமல் புஞ்­சி­ஹேவா தெரி­விக்­கையில், சந்­திப்­பிற்கு சகல கட்­சி­க­ளி­னதும் செய­லா­ளர்­க­ளுக்கும் கட்சி முக்­கி­யஸ்­தர்­க­ளுக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்ள அதேவேளை தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் அதி­கா­ரி­களும் கலந்துகொள்­ள­வுள்­ளனர்.

மாகாண சபை­க­ளுக்­கான ஆயுட்­காலம் நிறை­வ­டைந்து ஒரு வரு­டத்தைக் கடந்­துள்­ளது. அத்­தோடு அண்­மையில் இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­களைக் காரணம் காட்டி மாகாண சபைத் தேர்­தல்­களை மேலும் காலம் தாழ்த்­து­வ­தற்­கான முயற்­சிகள் இடம்­பெ­றலாம்.

இது குறித்து கவனம் செலுத்­தி­யுள்ள தேர்­தல்கள் ஆணைக்­குழு கட்சி செய­லா­ளர்கள் மற்றும் முக்­கி­யஸ்­தர்­களை அழைத்து கலந்­து­ரை­யாட தீர்­மா­னித்­துள்­ளது. இந்த தேர்­தல்­களை நடத்­து­வதில் காணப்­ப­டு­கின்ற சட்ட சிக்­கல்கள் குறித் தும் இதன்போது கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளது.

நாட­ளா­விய ரீதியில் அனைத்து பிர­தேச செய­ல­கங்­க­ளுக்­கூ­டாக வாக்­காளர் பெயர்­பட்­டியல் மீள்­தி­ருத்தம் தொடர்பில் கவனம் செலுத்­தப்­படும். அதா­வது வாக்­கா­ளர்­களை பதிவு செய்­வதில் பாரிய சிக்­கல்கள் உள்­ளன. எனவே இதி­லுள்ள நெருக்­க­டி­களைக் குறைத்துக் கொள்­வ­தற்­காக கட்­சி­க­ளிடம் உத­விகள் கோரப்­ப­ட­வுள்­ளன.

அதா­வது ஒவ்­வொரு கட்­சிக்கும் உரிய தொகு­திகள் மூலம் இவ்­வாறு உதவி கோரு­வ­தற்கு எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அத்­தோடு மாகாண சபைகள் அமைத்தல் தொடர்­பிலும் சில பிரச்­சி­னைகள் உள்­ளன. இது குறித்தும் ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. அரச அதி­கா­ரிகள் வாக்­க­ளிக்கும் தபால் வாக்கு முறைமை விஸ்­த­ரிக்­கப்­பட வேண்­டி­யது தற்­போது அவ­சி­ய­மா­கி­யுள்­ளது.

அதா­வது அரச திணைக்­க­ளங்­களில் பணி­பு­ரி­ப­வர்கள் மற்றும் வைத்­தி­யத்­துறை சார்ந்­த­வர்­களை கருத்திற்கொண்டு இந்த விட­யத்தில் கவனம் செலுத்­தப்­ப­ட­வுள்­ளது. தேர்­தல்கள் நடை­பெறும் காலங்­களில் இடம்­பெறும் மோச­டி­களை கண்­கா­ணிப்­ப­தற்கு பொலிஸார் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தாலும் அதில் திருப்­தி­யற்ற நிலைமை உள்­ளது.

எனவே வாக்­க­ளிப்பின் போது தேர்தல் ஆணைக்­குழு அதி­கா­ரிகள் பொலி­ஸா­ருடன் இணைந்து நேரடி கண்­கா­ணிப்பில் ஈடு­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று அர­சாங்கத்திடம் கோரிக்கை முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது. இது குறித்தும் கட்சி செய­லா­ளர்­களின் அபிப்­பி­ரா­யங்கள் பெறப்­படும். பெண்­களின் பிர­தி­நி­தித்­துவம் குறித்து பர­வ­லாகப் பேசப்­பட்­டாலும் அது நடை­மு­றையில் சாத்­தி­யப்­ப­டு­வ­தாகத் தெரி­ய­வில்லை.

எனவே எதிர்­வரும் காலங்­களில் இடம்­பெ­ற­வுள்ள தேர்­தல்­களில் நூற்­றுக்கு 25 வீதம் பெண் பிர­தி­நி­தித்­துவம் கட்­டா­யப்­ப­டுத்­த­ப்பட வேண்டும் என்­ப­தோடு, இதற்கு சகல அர­சியல் கட்­சி­களும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும். தேர்தல் கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மாகாண சபைத்தேர்தலை நடத்துவதற்கு கட்டளை பிறப்பிக் கப்படுமாக இருந்தால் அதனை நடத்த முடியும் என்று தெரிவித்துள்ளாா்.