படையினரின் சோதனை நடவடிக்கையால் வர்த்தகர்கள் பாதிப்பு. - THAMILKINGDOM படையினரின் சோதனை நடவடிக்கையால் வர்த்தகர்கள் பாதிப்பு. - THAMILKINGDOM
 • Latest News

  படையினரின் சோதனை நடவடிக்கையால் வர்த்தகர்கள் பாதிப்பு.

  நாட்டில் கடந்த ஈஸ்டர் தாக்குதல் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை யிலிருந்து மக்கள் மெல்ல மெல்ல திரும்பி வரும் நிலையில் வவுனியாவின் பல பகுதிகளிலுள்ள படையினரின் சோதனை நடவடிக்கை காரணமாக வர்த் தகர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  வவுனியா வைத்தியசாலையிலுள்ள படையினர் அப்பகுதியில் வாகனங் களை நிறுத்துவதற்கும் தடை விதிக் கப்பட்டு வருகின்றன. இதனால் நோயாளர்களைப் பார்வையிடச் செல் லும் உறவினர்கள் பொதுமக்கள் பெரி தும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தலைக் கவசத்தையும் வெளியே வைத்து விட்டு செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

  நகர பள்ளி வாசலுக்கு முன்பாக உள்ள படையினரால் பள்ளிவாசலுக்கு முன் பாக உள்ள வியாபார நிலையத்திற்கு முன்னால் வாகனங்களை நிறுத்தவ தற்கு தடை விதித்து வருகின்றனர் இதனால் குறித்த வியாபார நிலையங்க ளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் பொதுமக்களின் வருகையும் வீழ்ச்சியடைந் துள்ளது.

  தற்கொலைத் தாக்குதல் நடைபெற்று இரண்டு மாதங்கள் ஆகின்ற நிலை யிலும் வவுனியா நகரில் படையினரின் சோதனை நடவடிக்கைகள் குறை வடையவில்லை. வைத்தியசாலை, நகர பள்ளிவாசலுக்கு முன்பாக வீதியி லுள்ள படையினரால் வர்த்தகர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிப் படைந்து வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: படையினரின் சோதனை நடவடிக்கையால் வர்த்தகர்கள் பாதிப்பு. Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top