தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேற்றியதாக இல்லை - சிவாஜிலிங்கம் - THAMILKINGDOM தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேற்றியதாக இல்லை - சிவாஜிலிங்கம் - THAMILKINGDOM
 • Latest News

  தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேற்றியதாக இல்லை - சிவாஜிலிங்கம்

  கடந்த ஏழு மாதங்களாக தமிழ் மக்கள் எதிர்பார்த்த எதிர்பார்ப்புக்களிலே மிகப் பெரிய அளவிலே எதுவும் நடக்காத ஒரு ஏமாற்றமான சூழ்நிலை ஏற்பட் டிருப்பதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்டக் குழு தீர்மானித் துள்ளதாக அக்கட்சியின் அரசியல் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப் பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளாா். 

  குறிப்பாக அரசியல் கைதிகள் விடு தலை, கட்டாயமாகக் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் பிரச் சினை, காணிகள் விடுவிப்பு, இரா ணுவ முகாம்கள் குறைப்பு, இதைப் போல அரசியல் தீர்வு அது இப்போது இல்லையென்று ஆகிவிட்ட சூழ் நிலையிலே சில அத்தியாவசியமான தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலைமையுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளாா்.

  தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் அலுவலகத்தில் நேற்று மாலை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

  மேலும் தெரிவிக்கையில்,

  மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்து அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப வேண்டுமென்ற நியாயமான கோரிக்கைகள் ஈழத் தமிழ் மக்கள் சார்பிலே இருந்த பொழுதும் கூட இன்னமும் எஞ்சியிருக்கக் கூடிய காலத்திலே ஒரு சில விடயங்களையாவது ஆற்றியிருப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியி ருக்கலாம் என்ற ஒரு சில மக்களுடைய எதிர்பார்ப்பையும் ஈடு செய்யக் கூடிய விதத்திலே இந்த பிரேரனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பாரா ளுமன்ற உறுப்பினர்களும் நடுநிலை வகிக்க வேண்டும்.

  அவ்வாறு நடுநிலை வகிக்கும் நிலைப்பாட்டை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுக்காமல் அரசைக் காப்பாற்றும் வகையில் அரசிற்கு ஆதர வாக வாக்களிப்பார்களாயின் மக்கள் மத்தியிலிருந்து கூட்டமைப்பு தூக்கி வீசப்படக் கூடிய ஆபத்து இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  மக்கள் விடுதலை முன்னயினால் அரசிற்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடை பெற இருக்கின்றது. இச் சூழ் நிலையிலே தமிழ் மக்கள் உட்பட முழு நாடும் குறிப்பாக கூட்டமைப்பின் முடிவு என்ன என்பதை அறிவதற்கு மிகப் பெரிய அளவிலே ஆவலாக இருந்து கொண்டிருக்கின்றனர்.

  இச் சூழ்நிலையின் பின்னணியிலே தான் இதுவரை 2015 ஆம் ஆண்டிலிருந்த நல்லாட்சி அரசாங்கம் என்று ஐனாதிபதித் தேர்தலிலும் அதனைத் தொடர்ந்து பாராளுன்றத் தேர்தலிலும் அதன் பின்னர் அரசிற்கு கூட்டமைப்பு அளித்து வந்த ஆதரவையும் அதைப் போல கடந்தாண்டு ஒக்டோபர் மாதத்தில் நடந்த சதிப் புரட்சியின் பின்னரும் கூட மீண்டும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியைக் கொண்டு வருவதற்கு கூட்டமைப்பின் பங்க ளிப்பு மிகவும் அத்தியாவசியமாக இருந்தது.

  இச் சூழலின் பின்னரும் கூட கடந்த ஏழு மாதங்களாக தமிழ் மக்கள் எதிர் பார்த்த எதிர்பார்ப்புக்களிலே மிகப் பெரிய அளவிலே எதுவும் நடக்காத ஒரு ஏமாற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. 

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேற்றியதாக இல்லை - சிவாஜிலிங்கம் Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top