கல்முனை வடக்கு விவகாரம் : ரணில், சம்பந்தனுக்கிடையில் சந்திப்பு.! - THAMILKINGDOM கல்முனை வடக்கு விவகாரம் : ரணில், சம்பந்தனுக்கிடையில் சந்திப்பு.! - THAMILKINGDOM

 • Latest News

  கல்முனை வடக்கு விவகாரம் : ரணில், சம்பந்தனுக்கிடையில் சந்திப்பு.!

  கல்முனை வடக்குப் பிரதேச சபை தரமுயர்த்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வுக்கும் இடையே விசேட சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. 

  அம்பாறை, கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப் பட்டு வருகின்றது. பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் என்று அரசு தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதிய ளித்துள்ளபோதும், அது இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.

  அதையடுத்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பிர தமரைச் சந்திந்துக் கலந்துரையாடியுள்ளார். "கல்முனை வடக்கு பிரதேச செய லகம் விரைவில் தரமுயர்த்தப்படும்.

  முஸ்லிம் தரப்பினரின் இணக்கத்துக்காகவே காலம் தாமதித்தது. சபைக்கான கணக்காளர் நியமிக்கப்பட்டு முழு சபையாக இயங்க ஆவணம் செய்யப்படும்" என்று சந்திப்பில் உறுதி வழங்கியதாப தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: கல்முனை வடக்கு விவகாரம் : ரணில், சம்பந்தனுக்கிடையில் சந்திப்பு.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top