Breaking News

இன்று ஆரம்பமாகியது உயர்தரப் பரீட்சை

2019 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது. 

இம் முறை இடம்பெறுகின்ற உயர் தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதி யில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற் றுகின்றனர். இதேவேளை, நாடளா விய ரீதியில் 2 ஆயிரத்து 678 பரீட்சை நிலையங்களில் உயர் தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் உயர்தரப் பரீட்சைகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் அனைத்து பரீட்சார்த் திகளையும் நேரகாலத்துடன் பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் கேட்டுள்ளார்.

இப் பரீட்­சை­யை முன்­னிட்டு பரீட்சை மத்­திய நிலை­யங்கள் அனைத்­திலும் பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. முப்­ப­டை­யினர் பாது காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளாா்.