Breaking News

இலங்கையில் இனி திருமண வயதெல்லை 18 ஆக அதிகரிக்கப்படும்!

திருமணம் செய்து கொள்ளக் கூடிய ஆகக் குறைந்த வயதெல்லை 18 ஆக அதிகரிக்கப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார். 

அத்துடன் முஸ்லிம்களின் காதி நீதிமன்றம் மறுசீரமைக்கப்படும் எனவும், காதி நீதிமன்றத்தின் சட்டதிட்டங்களில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.   

ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

இந்த விடயங்கள் தொடர்பில் பெண்கள் அமைப்புகளுடன் பேச்சுவார்தை நடத்தி அவர்களின் கருத்துக்களை கேட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

அது தொடர்பான பல சுற்றுப் பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவெனவும், விரைவில் இந்த விவகாரம் தொடர்பாக சரியான தீர்வொன்று எட்டப்படுமெனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.