Breaking News

சூப்பர் லீக் - இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி மிரட்டல் வெற்றி!

2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிக்குரிய தகுதி சுற்றான சூப்பர் லீக் தொடரின் ஒருபகுதியாக ஆஸ்திரேலிய, இங்கிலாந்து பங்கேற்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. மான்செஸ்டரில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று 10 புள்ளிகளை கைப்பற்றியுள்ளது. 

சூப்பர் லீக் தொடரில் வெற்றிபெறும் அணிகளுக்கு 10 புள்ளிகளும், டிரா அல்லது போட்டி கைவிடப்பட்டால் தலா 5 புள்ளிகளும் வழங்கப்படும். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. 

ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வார்னர் 6, கேப்டன் பிஞ்ச் 16 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். பெரிதும் எதிர்பார்த்த லபுசேன் 21 ரன்களுக்கு நடையைக் கட்டினார். அலெக்ஸ் கேரி 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து, அணியை 123/5 என நெருக்கடி நிலைக்குள் தள்ளினார். 

23ஆவது ஓவருக்குப் பின்பு ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் வீழ்ச்சியை கட்டுப்படுத்தியது. ஸ்டோரிஸ் தனது பங்கிற்கு 43 ரன்கள் சேர்த்தார். மிட்செல் மார்ஸ், மேக்ஸ்வெல் பார்ட்னர்ஷிப் அமைத்து பட்டையைக் கிளப்பினர். மிரட்டல் பந்துவீச்சாளர் ஆர்ச்சர் வீசிய 4ஆவது ஓவரில் மேக்ஸ்வெல் தொடர்ச்சியாக இரண்டு சிக்ஸர்கள் விளாசினார். மார்ஸ் 73 ரன்களும், மேக்ஸ்வெல் 77 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 294 ரன்கள் சேர்த்தது. ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் உட் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர். அடில் ரஷித் இரு விக்கெட்களையும், கிறிஸ் ஓக்ஸ் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கத்தில் சறுக்கியது. ராய் 3 ரன்களும், ரூட் ஒரு ரன்னும் எடுத்து வெளியேறினர். மோர்கன் 23 ரன்கள் சேர்த்த நிலையில், ஜோஸ் பட்லர் ஒரு ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். 

இதனால் 57/4 என இங்கிலாந்து தோல்வியை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. ரெய்னா இடத்தை இவரால் மட்டுமே நிரப்ப முடியும்: ஷேன் வாட்சன் கணிப்பு! பேர்ஸ்டோ, பில்லிங்ஸ் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பேர்ஸ்டோ 84 ரன்கள் எடுத்தார். சாம் பில்லிங்ஸ் 2 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 118 ரன்கள் குவித்தார். 

மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். இறுதியில், 12 பந்துகளுக்கு 43 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 19 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது. 

ஆடம் ஜம்பா 4 விக்கெட்களையும், ஹாசில்வுட் 3 விக்கெட்களையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்கள். 

10 ஓவர்கள் வீசி 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றிய ஹாசில்வுட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.