Breaking News

புதிய அரசியல் யாப்பிற்கு பொது மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளல்!


இலங்கையில் இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பிற்கு பதிலாக புதிய அரசியல் யாப்புக்கான சட்டமூலம் ஒன்றை வகுப்பதற்காக பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு இருப்பதாக நீதி அமைச்சின் செயலாளர் எம் எம் பி கே மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக இது தொடர்பில் பிரஜை ஒருவர் தமது ஆலோசனை நிலைப்பாடு அல்லது கருத்துக்களை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்ப்பாளர்களாயின் அந்த ஆலோசனை நிலைப்பாடு அல்லது கருத்துக்களை சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் எந்த ஒரு மொழியிலாவது 2020 நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் அல்லது அதற்கு முன்னதாக செயலாளர், நிபுணர்கள் குழு, இலக்கம்-32, தொகுதி 02, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், கொழும்பு 7 என்ற முகவரிக்கு அல்லது expertscommpublic@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மேலதிக தகவல்களை நீதி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moj.gov.lk என்ற இணையதளத்தில் அல்லது 2020.10.20 ஆம் திகதி அரச அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்று நீதி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.