Breaking News

நன்றி வணக்கம் என்றால் எல்லாம் முடிந்து விட்டதாகவே அர்த்தம் - விஜய்சேதுபதி (காணொளி)


முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 800 படத்தில் இருந்து விலகியதாக விஜய்சேதுபதி அறிவித்துள்ளார். 

பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், 800 திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதியை முத்தையா முரளிதரன் கேட்டுக்கொண்டிருந்தார். அவரது அறிக்கையை தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த விஜய் சேதுபதி, நன்றி வணக்கம் என்று மட்டும் பதிவிட்டு இருந்தார்.

இதனிடையே சென்னையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விஜய்சேதுபதி, நன்றி வணக்கம் என்றால் எல்லாம் முடிந்து விட்டதாகவே அர்த்தம் என்றார்.