மீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்! - THAMILKINGDOM மீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்! - THAMILKINGDOM
 • Latest News

  மீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்!

  நன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது என பதில் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் சதாசிவம் சிறிதரன் தெரிவித்துள்ளார். 

  அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.  

  அதேவேளை கோட்பாட்டு அடிப்படையில் எந்த ஒரு மேற்பரப்பிலும் கொரோனா வைரஸ் காணப்படும் என்பதால் சமைப்பதற்கு மீனை தயாரிக்கும் போது அல்லது சேமித்து வைக்கும் போது முகத்தை கைகளால் தொடுவதை தவிர்ப்பதுடன் சமையல் பாத்திரங்கள் மற்றும் கரங்களை நன்கு கழுவி கொள்ளுதல் வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.  

  மேலும் அடிப்படையற்ற விதத்தில் மீன் சந்தைகளை மூடுவது அனாவசியமாகும். ஆகையால் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நெறிமுறையான முகக் கவசம் அணிதல் சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் கைகளை சவர்க்காரம் இட்டு நன்கு கழுவுதல் ஆகியவற்றை இறுக்கமாக பின்பற்றி மீன் சந்தை தொடர்ந்து நடத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மீன் சாப்பிடுபவர்களுக்கான அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்! Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
  Scroll to Top