விடுதலைப் புலிகளின் தடையை நீக்கியது பிரித்தானியா நீதிமன்றம்! சற்று முன் தீர்ப்பு வெளியானது! - THAMILKINGDOM விடுதலைப் புலிகளின் தடையை நீக்கியது பிரித்தானியா நீதிமன்றம்! சற்று முன் தீர்ப்பு வெளியானது! - THAMILKINGDOM
 • Latest News

  விடுதலைப் புலிகளின் தடையை நீக்கியது பிரித்தானியா நீதிமன்றம்! சற்று முன் தீர்ப்பு வெளியானது!


  பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை தவறானது என பிரித்தானிய நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 

  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடுத்த வழக்கிலேயே இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. 

  எவ்விதமான பயங்கரவாத செயற்பாடுகளிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஈடுபடவில்லை எனச்சுட்டிக்காட்டி தடையினை நீக்குமாறு பிரித்தானியாவின் உள்துறை அமைச்சிடம் 2008ம் ஆண்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியிருந்தது.

  இதனை பிரித்தானிய உள்துறை அமைச்சு நிராகரித்திருந்த நிலையில், தடையை நீக்கும் செயற்பாடாக Proscribed Organisations Appeal Commission (‘POAC’) ஆணையத்திடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சட்டநடவடிக்கையினை முன்னெடுத்திருந்தது. விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது தமிழர்களின் பேச்சு சுதந்திரத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் இடையூறாக இருக்கின்றதென வாதிட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சுதந்திர அரசின் வடிவத்தில் பிரயோகிப்பதற்கு தடையாக உள்ளதோடு, சுதந்திர தமிழீழத்தினை இலக்காக கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜனநாயகரீதியாக செயற்பாடுகளுக்கும் பெருந்தடையாக இது இருக்கின்றதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாதிட்டிருந்தது. 

  அதேவேளை, பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவைப் பொறுத்தே இந்த தீர்ப்பு உறுதிசெய்யப்படும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது..


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: விடுதலைப் புலிகளின் தடையை நீக்கியது பிரித்தானியா நீதிமன்றம்! சற்று முன் தீர்ப்பு வெளியானது! Rating: 5 Reviewed By: யாத்திரிகன்
  Scroll to Top