Breaking News

உயர்தர மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள உயர்தர மாணவர்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பாதிப்பை ஏற்படுத்தாது என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அவர்கள் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப பரீட்சைகளில் கலந்துகொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவௌியை கடைபிடித்தல் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பரீட்சையில் தோற்றும் உயர்தர மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் 1988 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. 

இதேவேளை கடந்த 24 மணித்தியாலயங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் 5 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இதுவரையில் ஊரடங்கு சட்டத்தை மீறி 302 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 53 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.