Breaking News

முன்னணி உறுப்பினரை ஈ.பி.டி.பி ஆதரவுடன் வெளியேற்றினார் மணி


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரியாலை வட்டார உறுப்பினர் ரஜீவ்காந்த் சபை அமர்வில் கலந்து கொள்ள ஒரு மாத காலத்திற்கு ஈ.பி.டி.பி ஆதரவுடன்  முதல்வர் மணிவண்ணன் தடை விதித்துள்ளார். 

யாழ்.மாநகர சபையின் மாதாந்த கூட்டம் இன்றைய தினம் நடைபெற்றது. அதன் போது மாநகர சபையில் இருந்து திருடப்பட்ட ஆவணம் ஒன்று சபை உறுப்பினர் ரஜீவ்காந்தின் உத்தியோகபூர்வ முகநூலில் பதிவேற்றப்பட்டு இருந்தது. குறித்த கடிதம் எவ்வாறு உறுப்பினர் கைக்கு கிடைத்தது என்பது தொடர்பில் விவாதம் எழுந்தது. 

அதன் போது சக உறுப்பினரான பார்த்தீபன் ரஜீபனை நோக்கி ஒருமையில் பேசியதாகவும் அதன் போது உறுப்பினர் ரஜீவ்காந்த் "நாய்" என விளித்து பேசியதாகவும் தெரியவருகிறது.

 அதனால் முதல்வர் சபையில் அநாகரிகமான முறையில் சொற்பிரயோகங்களை பாவித்தமைக்காக சபையில் மன்னிப்பு கோரி , குறித்த சொற்பிரயோகங்களை மீள பெறுமாறு இரு உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டதோக மணிவண்ணன் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இருந்தும் மன்னிப்பு கோராதபோது ஈ.பி.டி.பி மற்றும் ஐ.தே.க கட்சி ஆதரவுடன் சபை உறுப்பினரான ரஜீவ்காந்தை அண்மையில் ஈ.பி.டி.பி ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ள மணிவண்ணன் ஒருமாதகாலம் சபைக்கு வராதவாறு தடைவிதித்துள்ளார்.

ஏற்கனவே தான் சம்பளம் பெறமாட்டேன் என பொதுவெளியில் பேசிவிட்டு தனது உதவியாளர்கள் இருவருக்கு தனது சம்பளத்தை பிரித்து வங்கியில் வைப்பிலிடும்படி மணிவண்ணன் சபையில் செயலாளருக்கு எழுதிய கடிதத்தை பொதுவெளியில் ரஜீவ்காந்தே வெளிப்படுத்தியதாக மணிவண்ணன் கடும் கோபத்திலிருந்தார். அது தொடர்பில் அந்த உறுப்பினரை் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என மிரட்டி ஏற்கனவே கடிதம் அனுப்பியிருந்தார் அதற்கு சபை உறுப்பினர் மசியாதபோது தரணம் பார்த்து காத்திருந்த மணி இப்போது தனது கோபத்தை தீர்த்துக்கொண்டுள்ளார்.


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து வெளியேற்றப்பட்ட மணிவண்ணன் ஈ.பி.டி.பி மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் முதல்வராகி இன்னும் 6மாதங்களே பதவி இருக்கும் நிலையில் இப்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மீது பழிதீர்க்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய காணொளி


 





மணிவண்ணனிற்கு முதல் மன்னிப்பு -டக்ளஸ் அறிவிப்பு