Breaking News

பாதணிகளை நக்கச் சொன்ன அமைச்சர்-நடந்தது என்ன


அநுராதபுரம் சிறைச்சா லைக்கு அமைச்சருடன் (சிறைச் சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் மறுசீரமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த) சென்ற அமைச்சரின் சக நண் பர்கள், தமது பாதணிகளை நாக்கினால் நக்கிச் சுத்தம் செய்யுமாறு தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தி சித்திரவதை செய்தனர்.

இவ்வாறு குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் தெரிவித்தனர்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் கள் மேற்கண்டவாறு கூறினர்.

அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-

வழக்கம் போல் ஊடக அறிக் கைகளை விடுத்து பின்னர் ஓய்ந்து போவது எமது தலைவர்களது பண்பாடாகும். அவ்வாறில்லாமல் இந்த விடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தமிழ் அரசியல் தலைவர்கள் முன்னெடுக்க வேண்டும்.

கைதிகளது நலன்களைப் பாதுகாக்கும் ஓர் அமைச்சராக இருந்து கொண்டு எமது பிள்ளைகள் மற்றும் குடும்ப அங்கத்த 

வர்கள் மீது தனது நண்பர்களுடன் மது போதையில் இரவு நேரத்தில் துப்பாக்கி முனையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

அக்கும்பல் எமது பிள்ளைகளைத் தமது பாதணிகளை நக்கித் துப்புரவு செய்யச் சொல்லியிருக்கின்றனர். எமது உறவுகளை உயிருடன் பாதுகாக்க முதலில் அவர்களை யாழ்ப்பாணம் சிறைக்கு 
மாற்றவேண்டும். 

அதற்கு முன்னதாக அவர்கள் தொடர்பான வழக்குகள் உள்ள நீதிமன்றங்களில் அவர்களை முன்னிலைப்படுத்தி நடந்தவற்றை வெளிப்படுத்த வேண்டும்.கைதிகள் நீதிமன்ற விசாரணைகளுக்காகவே சிறைகளில் தடுத்து வைக்கப்படுள்ளனர். அவ்வகையில் அவர்களைப் பாதுகாக்க வேண்டியது இலங்கை நீதி 
மன்றங்களது கடமை.

தமிழ்க் கட்சிகளது பிரதிநிதிகள் குழு வொன்று உடனடியாக நேரில் அநுராத புரம் சிறைக்குப் பயணம் செய்து தமிழ் அரசியல் கைதிகளது நலன்களை முதலில் கண்காணிக்கவேண்டும்.

16 அரசியல் கைதிகளது விடுதலை பற்றி வெளிவிவகார அமைச்சர் ஜெனிவா அமர்வில் உரையாற்றிக் கொண்டிருக்க, சிறையினுள் கைதிகளை அதற்குப் பொறுப்பான அமைச்சரே கொல்ல முற்படுகின்ற அவலம் நடந்திருக்கின்றது.

மேலும் இதுதொடர்பா மேலும் சில விடயங்கள் வெளியாகியுள்ளது.13ஆம் திகதி திங்கட்கிழமை ஜெனிவா வில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 48ஆவது அமர்வு ஆரம்பமாகவிருந்தது. 

அதிலே இலங்கை விடயம் பேசப்படவிருந்தது. பயங்கவாதத் தடைச் சட்டம் இலங்கையில் தொடர்ந்து நீடிக்கப்படுகின்றமை, அச்சட்டத்தின் கீழ் தொடர்ந்து சிறை வைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் பரிதாபம், பொலிஸ் காவலில் இருப்போர் தொடர்ந்து கொல்லப்படுவது, நீதித்துறை மூலமான முறையற்ற அழுத்தங்கள் குறித்தெல்லாம் ஜெனிவாவில் பேசப்ப டும் என எதிர்பார்க்கப்பட்ட சமயம் அது. 

போதாக்குறைக்கு ஐ.நா. பொதுச் சபை யின் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக அடுத்த வாரம் நாட்டின் ஜனாதிபதி அமெரிக்கா போகவிருக்கின்றார். சரியாக ஒரு வாரத்தில் அவரின் உரை நிகழவிருந்தது.ஜெனிவாக் கூட்டத்துக்கு முதல்நாள் இரவு வெலிக்கடைச் சிறைக்குள்ளும், அடுத்த நாள் கூட்டம் ஆரம்பமாக இருக் கையில் அநுராதபுரம் சிறைக்குள்ளும் புகுந்து அட்டகாசம் பண்ணி, அப்பாவித் தமிழ் அரசியல் கைதிகளின் ஆபத்து நிலையை அம்பலப்படுத்தியிருக்கின்றார் சிறைத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர்.சர்வதேச ஊடக சுதந்திர தினத்துக்கு முதல் நாள் யாழ். பத்திரிகை அலுவலகத்துக்குள் புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்தி, மஹிந்தவின் முகத்தில் கரி பூசியது அவர் வளர்த்த புலனாய்வுப் பிரிவும் அதன் கூலிப் பட்டாளமும்.அதே மாதிரி ஜெனிவாவில் மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டம் நடக்க விருக்கையில் ஜனாதிபதி கேட்டாபாய வின் முகத்தில் கரிபூச வைத்திருக்கின்றார் அவர் செல்லப்பிள்ளை போன்று போக்கும் லொஹான் ரத்வத்தை.குடித்துக் கும்மாளமிட்டுக் கொண்டிருந்த லொஹான் ரத்வத்தையிடம் அவரின் குடிகார சகாக்கள் மரண தண்டனை நிறைவேற்றப்படும் - கழுவேற்றும் - இடத்தை பார்க்க விரும்புகின்றார்கள் எனக் கூறியிருக்கின்றனர். 

தாமே சிறைத் துறை அமைச்சர் என்ற பந்தாவில் முன் னிரவு நேரம் அந்தக் கும்பலுடன் வெலிக்கடைச் சிறைக்கு வந்திறங்கியிருக்கின்றார் அவர். அப்போது அவருக்கு முழு ஏற்றம். அழகு ராணியான யுவதி ஒருவரும் அந்தக் கும்பலில் இருந்திருக்கின்றார்.

அதிகாரமும் போதையும் தலைக்கேற வெலிக்கடைக்குள் அட்டகாசம் பண்ணிய அமைச்சர், தமிழ் அரசியல் கைதிகளைக் கூட்டிவரும்படி சத்தமிட்டிருக்கின்றார். 

நிலைமையின் விபரீதத்தைப் புரிந்து கொண்ட சிறை அதிகாரிகள், அரசியல் கைதிகள் வெலிக்கடையில் இல்லை, அநுராதபுரம் சிறையில்தான் என்று கூறி சமாளித்திருக்கின்றனர். 

ஒருவாறு அமைச்சரையும் குழுவினரையும் தாஜா பண்ணி அனுப்பி வைத்திருக்கின்றனர்.ஆனால் காலையில் விடிந்ததும், அந்த யுவதியைத் தவிர்த்து ஏனையோரோடு அநுராதபுரத்துக்குப் புறப்பட்டிருக்கின்றார் அமைச்சர் - தமிழ் அரசியல் கைதிகள் மீதான தனது அதிகாரத்தைக் காட்டி, தனது நண்பர் குறூப்பிடம் தனது "கலர்ஸை' வெளிப்படுத்த.ஜனாதிபதியுடன் தமக்கிருந்த தொடர்பு என்ற அதிகாரத்தை வைத்துக் கொண்டு நள்ளிரவிலேயே யஹலிக்கொப்டரை ஏற்பாடு செய்து. காலையில் விடிந்ததும் அநுராதபுரம் பறந்திருக்கின்றார் - மீண்டும் "புல்'லாக ஏற்றிக் கொண்டு.தன்னிலை மறந்த லொஹான்ரத்வத்தை அநுராதபுரத்தில் தமது நண்பர் குழாமுடன் நடந்து கொண்ட முறைமை விவரிக்கப் பொருத்தமற்றது. அவ்வளவு கேவலமானது.

அவர் செய்தவை அனைத்தும் கிரிமினல் நடவடிக்கை. பாதிக்கப்பட்ட - அச்சுறுத்தப்பட்ட - கைதிகள் முறைப்பாடு செய்தால் லொஹான் ரத்வத்தை உடன் கைது செய்யப்பட வேண்டும். 

ஆனால் அது நடக்காது என்று தெரிகின்றது.இந்த அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டிருக்கின்றது. அதன் மூலம் விண்ணப்பித்து வெளியே வருவதற்கான வாய்ப்பை ஆவலுடன் பார்த்திருக்கின்றார்கள் அரசியல் கைதிகள். இச்சமயத்தில் உண்மையைத் துணிச் சலுடன் எடுத்துரைத்து, அவர்கள் தைரியமாக சட்ட முறைப்பாடுகளைச் செய்வார்களாயின் அதற்கு நீதி கிடைக்குமோ எண்ணவோ சந்தேகம்தான். ஆனால், அவர்கள் - அந்தக் கைதிகள் - விடுதலையாகி வெளியே வருவதற்கு இருந்த வாய்ப்பு அடியோடு அடிபட்டுப் போய்விடும்.

நம் சகோதரர்களான அந்த அரசியல் கைதிகளின் அவல நிலைமை இதுதான். இதனால், அட்டகாசம் பண்ணிய லொஹான் ரத்வத்தை தப்பிப் போவதற்கான வாய்ப்புகளே அதிகம் உண்டு.