Breaking News

புதிய பிறழ்வு எந்த நேரத்திலும் நாட்டிற்குள் நுழையலாம் – எச்சரிக்கை!

 


நாட்டிற்குள் எப்போதுவேண்டுமானாலும் புதிய கொரோனா பிறழ்வு நுழையலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறப்பட்டுள்ள அதேவேளை துறைமுகங்கள் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளதால் புதிய மாறுபாடுகள் நாட்டுக்குள் பரவி கணிக்க இயலாத தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்றும் அவர் கூறினார்.

எனவே முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும் பொது மக்கள் சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என்றும் வைத்தியர் அசேல குணவர்தன கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில், மொத்த மக்கள்தொகையில் 67 சதவிகிதமானோர் முதலாவது தடுப்பூசியையும் 58 சதவிகிதமானோர் முழுமையாகவும் தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

இருப்பினும் திருப்திகரமான நிலையை அடைய வேண்டுமானால், மொத்த மக்கள் தொகையில் 70 முதல் 80 சதவிகிதமாணவர்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அசேல குணவர்தன சுட்டிக்காட்டினார்.