பி.ப.4 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை! - THAMILKINGDOM பி.ப.4 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை! - THAMILKINGDOM

 • Latest News

  பி.ப.4 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை!   நாட்டில் தற்போது நிலவும் உலர்ந்த வானிலையில் சிறிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

  நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

  அனுராதபுரம் - பிரதானமாக சீரான வானிலை

  மட்டக்களப்பு - பிரதானமாக சீரான வானிலை

  கொழும்பு - பி.ப.4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

  காலி - பி.ப.4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

  யாழ்ப்பாணம் - பிரதானமாக சீரான வானிலை

  கண்டி - பிரதானமாக சீரான வானிலை

  நுவரெலியா - பி.ப.4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

  இரத்தினபுரி - பி.ப.4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

  திருகோணமலை - பிரதானமாக சீரான வானிலை

  மன்னார் - பிரதானமாக சீரான வானிலை
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: பி.ப.4 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top