தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ன தீர்வினை முன்வைக்கப் போகிறார்கள் ? சித்தார்த்தன் கேள்வி - THAMILKINGDOM தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ன தீர்வினை முன்வைக்கப் போகிறார்கள் ? சித்தார்த்தன் கேள்வி - THAMILKINGDOM

 • Latest News

  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ன தீர்வினை முன்வைக்கப் போகிறார்கள் ? சித்தார்த்தன் கேள்வி

   

   
  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ன தீர்வினை முன் வைக்கப் போகிறார்கள் அல்லது தீர்வு விடயத்தில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்று கூறமுடியுமா? நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே த.சித்தார்த்தன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்கள் மத்தியில் பொய் சொல்வதற்கு தகுதி வேண்டும் 13வது திருத்தச் சட்டத்தினை நாங்கள் தீர்வாக ஏற்றுக் கொண்டுள்ளோம் என கஜேந்திரகுமார் அணியினர் பொய் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்கள். அவ்வாறு பொய் பிரச்சாரம் மேற்கொள்பவர்கள் என்ன தீர்வினை முன் வைக்கப் போகிறார்கள் அல்லது தீர்வு விடயத்தில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்று கூறமுடியுமா? ஏன் அவர்கள் இவ்வாறு செயற்படுகிறார்கள் என தெரியவில்லை. அத்தோடு கஜேந்திரகுமார் அணியினர் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் போட்டியிடவுள்ளார்கள் யாரை முதலமைச்சராக முற்படுத்துவது என்பது தொடர்பில் கட்சிக்குள் போட்டி நிலை காணப்படுகின்றது. அவ்வாறான நிலையில் ஏன் இவ்வாறு மக்களை குழப்பும் செயற்பாட்டில் ஈடுபடுகிறார்கள் என நான் கேட்க விரும்புகின்றேன். அவர்களது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் அதாவது தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவர்கள் என்ன தீர்வினை முன் வைத்திருக்கிறார் என்று யாருக்கும் தெரியுமா? அவர்களுடைய தீர்வு ஒற்றையாட்சிக்குள் அமைகின்றது எனவே மக்களை இனியும் அவர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது மக்களுக்கு நன்கு விளங்கும் இவர்கள் பொய்யுரைக்கின்றார்கள்” என தெரிவித்துள்ளார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ன தீர்வினை முன்வைக்கப் போகிறார்கள் ? சித்தார்த்தன் கேள்வி Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top