நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்திற்காக மும்மையில் இருந்து வந்த பிரபல நடிகர்! - THAMILKINGDOM நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்திற்காக மும்மையில் இருந்து வந்த பிரபல நடிகர்! - THAMILKINGDOM

  • Latest News

    நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்திற்காக மும்மையில் இருந்து வந்த பிரபல நடிகர்!

     

    நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். 

    தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வந்த நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். அதன்பின், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூலை 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் விமர்சையாக திருமணம் நடக்கவுள்ளதாக விக்னேஷ் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். 

    இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் மு

    ன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் 200க்கு மேற்பட்ட பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், வரிசையாக பிரபலங்கள் மகாபலிபுரம் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். ஷாருக்கான் தற்போது நடிகர் ஷாருக்கான், நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

     இதற்காக மும்பையில் இருந்து வந்திறங்கிய இவர் மணமக்கள் விக்னேஷ் சிவன் - நயன்தாராவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். நடிகர் ஷாருக்கான் கலந்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்திற்காக மும்மையில் இருந்து வந்த பிரபல நடிகர்! Rating: 5 Reviewed By: Thamil
    Scroll to Top