Breaking News

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாடல்..

 

 

கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்"பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. 

 பொன்னியின் செல்வன் முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் முதல் பாடல் 'பொன்னி நதி' இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருத்ததை அடுத்து இப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.