Breaking News

சைக்கிள் உருவான கதை!!

 






இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் சிறிது கூட உடல் உழைப்பு இல்லாமல் பயணிக்கவே விரும்புகின்றனர். குறைந்தது பைக் போன்ற வாகனமாவது தேவையாக உள்ளது. கடன் வாங்கியாவது வண்டியை வாங்கி, உழைத்து சம்பாதித்த பணத்தில் பெட்ரோல் போட்டு வண்டியை ஓட்டுவது தற்போது சாதாரண ஒன்றாகிவிட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை நகரம், கிராமம் என்ற பாகுபாடின்றி உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களின் முதன்மையான போக்குவரத்து வாகனமாக இருந்தது சைக்கிள் தான். முதல் முதலில் சைக்கிள் எப்படி உருவாக்கப்பட்டது தெரியுமா...

பிரான்சை சேர்ந்த கோம்டி மீடி டீ ஷிவ்ராக் வசதியான குடும்பத்தில் பிறந்த இவர் தினமும் மரத்தாலான, வீட்டுக்கு தேவையான பொருட்களை உருவாக்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது அவர் உருவாக்கிய அந்த சைக்கிளில் தான் உலகின் முதல் சைக்கிள். மரக்கட்டைகள் மூலம் 1791-ல் உருவாக்கப்பட்ட இந்த சைக்கிளில், பெடல், ஸ்டியரிங், பிரேக் போன்றவை கிடையாது. அதில் பயணிக்கும் நபர், கால்களை உந்தித் தள்ளியே முன்னால் போகச் செய்ய வேண்டும்.

இந்த சைக்கிளின் தொழில்நுட்பத்தை மாதிரியாக கொண்டு, ஜெர்மனியை சேர்ந்த கார்ல் வோன் ட்ரைஸ் என்பவர் 1817-ல் வடிவமைத்த சைக்கிள் தான், முதன் முதலாக ஸ்டீயரிங் (Steering) உடன் உருவாக்கப்பட்டது. ஆணிகளைத் தவிர்த்து மற்ற அனைத்து பாகங்களும் மரத்தால் ஆனது. இந்த சைக்கிள் தான் காப்புரிமை பெறப்பட்ட முதல் சைக்கிள் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த சைக்கிளை மாதிரியாக கொண்டு லண்டனை சேர்ந்த டென்னிஸ் ஜான்சன் என்பவர், 1818-ல். சைக்கிளின் சில குறிப்பிட்ட பாகங்களை உலோகப் பொருட்களை பயன்படுத்தி வடிவமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வடிவமைப்பு தான் சிறிது சிறிதாக மாற்றப்பட்டு தற்போதய சைக்கிளின் வடிவமைப்புக்கு காரணமாக இருக்கிறது.

மாட்டு வண்டிக்கு பிறகு மனித குலத்திற்கு அதிகம் பயன்பட்ட சுற்றுச்சூழலைக் கெடுக்காத, செலவு குறைந்த வாகனம் என்றால் அது சைக்கிள்தான். ஒரு காலத்தில் சாலைகளில் ஹீரோவாக வலம் வந்த சைக்கிள் இன்று காணாமல் மறைந்து வருகிறது. டந்த 30 ஆண்டுகளில் நாம் சைக்கிள் ஓட்ட மறந்த பிறகுதான் நாட்டில் சர்க்கரை நோய் தொடங்கி பல நோய்கள் அதிகரித்துள்ளன.

வரும் காலங்களில் பெட்ரோல் தீர்ந்து போகும் என்ற அச்சத்தில் மின்சார வாகனத்திற்கு மாறுவதற்கு தயாராகி வருகிறோம். ஆனால் குறைந்த தூரத்திற்கு செல்வதற்கும் உடல் நலனைக் காப்பதற்கும் சைக்கிளை விட்டால் வேறு சிறந்த வாகனம் கிடையாது என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.