பருப்பு, சீனி, கி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு! - THAMILKINGDOM பருப்பு, சீனி, கி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு! - THAMILKINGDOM

 • Latest News

  பருப்பு, சீனி, கி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

   


  பருப்பு, சீனி, கிழங்கு, வெங்காயம், மிளகாய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கணிசமாக குறைவடைந்துள்ளது.

  புறக்கோட்டை வர்த்தக சங்கம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.

  இதற்கமைய 600 ரூபாயாக இருந்த பருப்பு மொத்த விலை 410 ரூபாயாகவும், 330 ரூபாயாக இருந்த சீனியின் மொத்த விலை 270 ரூபாயாகவும், ரூ.215 ஆக இருந்த உருளைக்கிழங்கின் மொத்த விலை ரூ.150 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

  600 ரூபாவாக இருந்த வெங்காயத்தின் மொத்த விலை 420 ரூபாவாகவும், 1900 ரூபாவாக இருந்த மிளகாய் விலை 1300 ஆகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  டொலரின் ஸ்திரத்தன்மை மற்றும் வங்கிகள் டொலர்களை வழங்குவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: பருப்பு, சீனி, கி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு! Rating: 5 Reviewed By: news
  Scroll to Top