சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பயங்கரம்- துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலி! - THAMILKINGDOM சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பயங்கரம்- துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலி! - THAMILKINGDOM

 • Latest News

  சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பயங்கரம்- துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலி!

   


  சீன நாட்காட்டியின்படி இன்று புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும் சீனர்கள் தங்கள் புத்தாண்டு பிறப்பை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மாண்டெரி பார்க் பகுதியில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் இன்று சீன புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது. 

  இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போது, புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூடில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

  மேலும் பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பயங்கரம்- துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலி! Rating: 5 Reviewed By: news
  Scroll to Top