நான் திரும்ப வந்துவிட்டேன் - டொனால்டு டிரம்ப் பேஸ்புக் பதிவு! - THAMILKINGDOM நான் திரும்ப வந்துவிட்டேன் - டொனால்டு டிரம்ப் பேஸ்புக் பதிவு! - THAMILKINGDOM

 • Latest News

  நான் திரும்ப வந்துவிட்டேன் - டொனால்டு டிரம்ப் பேஸ்புக் பதிவு!

   


  அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். இவர் 2017 முதல் 2021 ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக செயல்பட்டு வந்தார். 2021-ம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்து ஜோ பைடன் அமெரிக்க அதிபராக வெற்றிபெற்றார்.

   தனது தோல்வியை ஏற்க மறுத்த டொனால்டு டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் 

  வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார். இதை அவர் தனது பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பினார். 

  அவரது பேச்சையடுத்து ஜனவரி 6-ம் தேதி டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க பாராளுமன்றத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். 

  இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வன்முறையை தூண்டியதாக டொனால்டு டிரம்பின் பேஸ்புக், யூடியூப் பக்கங்கள் முடக்கப்பட்டன. இந்நிலையில், 2 ஆண்டாக முடக்கப்பட்ட டொனால்டு டிரம்பின் பேஸ்புக், யூடியூப் பக்கங்கள் இன்று செயல்பாட்டிற்கு வந்துள்ளன. 

  சமூக வலைதள பக்கங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் டொனால்டு டிரம்ப் தனது பேஸ்புக், யூடியூப் பக்கங்களில் 'நான் திரும்ப வந்துவிட்டேன்' என பதிவிட்டு வீடியோ ஒன்றை இணைத்துள்ளார்.

   வரும் 2024-ம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: நான் திரும்ப வந்துவிட்டேன் - டொனால்டு டிரம்ப் பேஸ்புக் பதிவு! Rating: 5 Reviewed By: news
  Scroll to Top