மன்னாரில் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் - THAMILKINGDOM மன்னாரில் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் - THAMILKINGDOM

 • Latest News

  மன்னாரில் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்

  புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் சர்வதேச
  புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினமாகிய இன்று சனிக்கிழமை காலை மன்னாரில் நடைபெற்றது. இலங்கை செஞ்சிலுவைசங்கத்தின் மன்னார் மாவட்ட கிளை மற்றும் மாவட்ட சுகாதார பணிமனை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்விற்கு செஞ்சிலுவைசங்கத்தின் மன்னார் கிளையின் செயலாளர் ரகு சங்கர் தலைமை தாங்கினார்.

  இன்று காலை 9:00 மணியளவில் ஆரம்பமாகிய ஊர்வலத்தில் புகைத்தலுக்கு எதிரான விழிப்புனர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு பலர் கலந்துகொண்டனர். மாவட்ட சுகாதார தினைக்களத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு மன்னார் வலயகல்வி பணிமனைக்குச் சென்று பிரதான விதி, வைத்தியசாலை வீதி, புனித செபஸ்தியார் வீதி ஊடாக மன்னார் நகர பகுதியை அடைந்து மன்னார் மாவட்ட செயலகம் முன் ஊர்வலம் நிறைவடைந்தது. 

  நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஜே.ஜே.கெனடி, மன்னார் மாவட்ட சுகாதார அதிகாரி றோய் பிரீஸ், மன்னார் மாவட்ட சர்வ மத இணைத்தலைவர் அருட்தந்தை நேசன் அடிகளார், அருட்சகோதரி , பாடசாலை மாணவர்கள், மன்னார் மாவட்ட சுகாதார பணிமனை உத்தியோகத்தர்கள், செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர்கள், செஞ்சிலுவைச் சங்கத்தின் தொண்டர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மன்னாரில் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top