Breaking News

ராஜபக்சேவுக்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம்!


இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதையொட்டி அவருக்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதையொட்டி, ஆம் ஆத்மி கட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடத்தப்படுவதாகவும், தமிழர்களின் நிலங்களை, அபகரிப்படுவதாகவும், ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் தமிழ் மொழிக்கு, அரசியல் சாசன அந்தஸ்து வழங்கவும், தமிழர் பகுதிகளில் சிங்களமொழி கட்டாயப்படுத்துவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவம், முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்றும், இலங்கை போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச அளவில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.