Breaking News

83 கலவரத்தை நினைவூட்டிய அழுத்கம வன்முறை

இலங்­கையின் வர­லாற்றில் கறை படிந்த அத்­தி­யா­ய­மாக
1983 ஆம் ஆண்டு இனக்­க­ல­வரம் பதி­வா­கி­யி­ருக்­கின்­றது. சிறு­பான்­மை­யி­னத்­த­வ­ரா­கிய தமிழ் மக்கள் மீது அப்­போது ஐந்து நாட்கள் தொடர்ச்­சி­யாக இனி இல்­லை­யென்ற அளவில் வன்­முறை கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டி­ருந்­தது. ஆயி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்கள் அதில் கொல்­லப்­பட்­டார்கள்.

எண்­ணற்­ற­வர்கள் காய­ம­டைந்­தார்கள். இலட்­சக்­க­ணக்­கா­ன­வர்கள் அக­தி­க­ளாக்­கப்­பட்டு, இந்­தி­யாவில் தமி­ழ­கத்­திலும், இலங்­கையின் வட­மா­கா­ணத்­திலும் தஞ்­ச­ம­டைந்­தார்கள். பாதிக்­கப்­பட்­ட­வர்­களைக் கடல் வழி­யாக இந்­தியா கப்­பல்­களை அனுப்பி இந்த இடங்­க­ளுக்கு ஏற்றிச்சென்­றது. அந்த அள­விற்கு அந்தக் கல­வரம் கொடூர­மாக இருந்­தது. 

1983 இனக்­க­ல­வரம் இடம்­பெற்று முப்­பத்­தொரு ஆண்­டுகள் கழிந்த நிலையில் இப்­பொ­ழுது அளுத்­க­மவில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­முறை இடம்­பெற்­றி­ருக்­கின்­றது. பௌத்­தர்கள் குழு­வொன்­றிற்கும் முஸ்லிம் குழு­வுக்கும் இடை­யி­லான மோதல்­க­ளாக இது வர்­ணிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

ஆனால், இந்தக் கல­வ­ரத்தில் முஸ்­லிம்­களே உயி­ரி­ழந்­தி­ருக்­கின்­றார்கள். காய­ம­டைந்­தி­ருக்­கின்­றார்கள். அக­தி­க­ளா­கி­யி­ருக்­கின்­றார்கள். அவர்­க­ளு­டைய வர்த்­தக நிலை­யங்கள், வீடுகள், என்­பன தீயி­டப்­பட்­டி­ருக்­கின்­றன. பள்­ளி­வாசல் ஒன்­றுக்குள் தஞ்சமடைந்திருந்த முஸ்­லிம்கள் மீது பள்­ளி­வா­ச­லுக்குள் வைத்து துப்­பாக்கிப்பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கவும், கண்­ணீர்ப்­புகைப் பிர­யோகம் செய்­த­தா­க­வும்­கூட தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன. 

அர­சாங்­கத்தின் ஆசீர்­வா­தத்­துடன், காவல்­துறை போன்று செயற்­பட்டு வரு­கின்ற பொது ­பலசேனா அமைப்­பி­னரே இந்தக் கல­வ­ரத்தின் பின்­ன­ணியில் இருப்­ப­தாகக் குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. வீதியில் குழு­மி­யி­ருந்த சில முஸ்லிம் இளை­ஞர்­க­ளுக்கும் வழியில் வந்த வாகனம் ஒன்றில் பயணம் செய்த பௌத்த பிக்கு ஒருவர் உள்­ளிட்ட பௌத்த சிங்­க­ள­வர்கள் சில­ருக்கும் இடையில் ஏற்­பட்ட வாய்த்­தர்க்கம் ஒன்றே இந்தக் கல­வ­ரத்தின் தொடக்கப் புள்­ளி­யாகக் கூறப்­ப­டு­கின்­றது. 

முஸ்லிம் இளை­ஞர்கள் பௌத்த பிக்­குவை கடும் வார்த்­தை­களைப் பயன்­ப­டுத்தி ஏசி­ய­தாக ஒப்­புக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஆனால், அந்த பௌத்த மத­குரு மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டதால், அவர் காய­ம­டைந்து வைத்­தி­யசாலையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தாக பௌத்­தர்கள் தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆயினும் எவ­ரையும் தாங்கள் தாக்­க­வில்லை என முஸ்லிம் இளை­ஞர்கள் கூறி­யி­ருப்­ப­தாகத் தகவல். 

ஆனால், இந்தச் சம்­ப­வத்தில் பௌத்த பிக்கு ஒருவர் கொல்­லப்­பட்­ட­தாக வதந்தி பரப்­பப்­பட்டு, பௌத்­தர்­களின் உணர்­வுகள் தூண்­டப்­பட்டு, அதனால் அவர்கள் கட்­டுக்­க­டங்­காத ஆத்­திரம் கொண்டு முஸ்­லிம்­களைத் தாக்­கி­ய­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது. கூட்டம் ஒன்று முடிந்து அமை­தி­யாகத் திரும்­பிக்­கொண்­டி­ருந்த தங்கள் மீது முஸ்­லிம்கள் கற்­களை வீசித் தாக்­கி­ய­தா­கவும், இதனால், கட்­டுக்­க­டங்­காமல் செயற்­பட்ட, பௌத்­தர்கள் கூட்­டத்தைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் போன­தாக பொது­ ப­ல­சேனா அமைப்­பினர் கூறி­யி­ருக்­கின்­றார்கள். 

தாங்கள் முஸ்­லிம்­களைத் தாக்­க­வில்லை என்றும் அவர்கள் தெரி­வித்­தி­ருக்­கின்­றார்கள். 'இலங்கை பௌத்­தர்­க­ளு­டைய நாடு என்­பதைப் புரிந்து கொள்ள வேண்டும்' முஸ்­லிம்கள் மீது பௌத்த தீவி­ர­வா­திகள் மேற்­கொண்டு வரு­கின்ற தொடர்ச்­சி­யான மதரீதி­யான அடக்­கு­முறைப் போக்கே, சிறிய சம்­பவம் ஒன்று இவ்­வாறு பெரும் வன்­மு­றை­யாக வெடிப்­ப­தற்குக் கார­ண­மா­கி­யி­ருக்­கின்­றது என்­பது தெட்டத் தெளி­வாகத் தெரி­கின்­றது. 

பொது ­பலசேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் திங்­க­ளன்று நடத்­திய அவ­சர செய்­தி­யாளர் மாநாட்டில் தெரி­வித்­துள்ள கருத்­துக்கள் இதனை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றன. 'பௌத்த பிக்கு தாக்­கப்­பட்­டது தொடர்­பாகத் தகவல் அறிந்து, பல பௌத்த அமைப்­புக்­க­ளுடன் இணைந்து பிரச்­சினை தொடர்­பாகப் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தினோம். 

இதன் பின்னர், நாங்கள் அங்­குள்ள விகா­ரையில் மாநாடு நடத்தி, இவ்­வா­றான சம்­ப­வங்­க­ளுக்குப் பொறுப்­பா­ன­வர்­களை விமர்­சித்தோம். இந்த மாநாடு முடிந்து பொலிஸ் பாது­காப்­புடன் கொழும்பு நோக்கித் திரும்­பிக்­கொண்­டி­ருந்­த­போதே, முஸ்லிம் பள்­ளி­வா­ச­லுக்­குள்ளே இருந்த முஸ்லிம் அடிப்­படைவாத கோஷ்­டி­யினர், பௌத்த குரு­மார்கள் மீதும், எமது உறுப்­பி­னர்கள் மீதும் கற்­களை எறிந்­தார்கள். 

இதனால், ஆத்­தி­ர­ம­டைந்த மக்கள் கட்­டுக்­க­டங்­காமல், தாக்­கு­தல்­களை நடத்­தி­னார்கள். இவ்­வா­றான சூழ்­நி­லையில் முஸ்­லிம்­களின் சொத்­துக்கள் சேத­மாக்­கப்­பட்­டன. உயிர்­களும் பலி­யா­கின. இது கவ­லைக்­கு­ரிய, வேத­னைக்­கு­ரிய சம்­ப­வ­மாகும். மக்­களின் ஆத்­தி­ரத்தை கட்­டுப்­ப­டுத்த முடி­யாத நிலை­யி­லேயே இந்த சம்­ப­வங்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன என அவர் அந்த செய்­தி­யாளர் மாநாட்டில் அவர் கூறி­யி­ருக்­கின்றார். 

இன்­னு­மொரு விட­யத்­தையும் அவர் அங்கு குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். 'இலங்கை சிங்­கள பௌத்­தர்­க­ளுக்குச் சொந்­த­மான நாடு என்­பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, முஸ்லிம் அடிப்­ப­டை­வாத சக்­தி­களை இல்­லா­தொ­ழிக்க முஸ்லிம் தலை­வர்கள் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்' என்று பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கர­கொட அத்தே ஞான­சார தேரர் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார். '

அசம்­பா­வி­தங்­களில் பௌத்த குருமார் இருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் மேலும் பல பொய்கள் வதந்­தி­க­ளாகப் நாட்­டுக்குள் கட்­ட­விழ்த்து விடப்­ப­டு­கின்­றன. இதற்கு மக்கள் ஏமாறக்கூடாது. பொறுமை காத்து அமைதி காக்க வேண்டும். இனி­மே­லா­வது அர­சாங்கம் கண்­களைத் திறக்க வேண்டும். அடிப்­ப­டை­வா­தத்தை ஒழிக்க வேண்டும்' என்றும் அவர் செய்­தி­யா­ளர்கள் ஊடாகக் கோரி­யி­ருக்­கின்றார். 

அளுத்­கம கல­வ­ரங்­க­ளின்­போது, பொலி­சாரும் இரா­ணு­வத்­தி­னரும் தமது கட­மை­களைச் சரி­யாகச் செய்­ய­வில்லை. அவர்கள் கல­கக்­கா­ரர்­களை ஊக்­கு­விக்கும் வகையில் நடந்துகொண்­டார்கள் என்று பாதிக்­கப்­பட்­ட­வர்கள் குற்றம் சுமத்­தி­யி­ருக்­கின்­றார்கள். கல­வரம் நடை­பெற்­ற­போது, பொலிஸார் துப்­பாக்­கி­களை ஏந்­தி­யி­ருக்­க­வில்லை என்றும், அதனால் வன்­மு­றை­களைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் போன­தா­கவும் பொலிஸ் மா அதிபர் தெரி­வித்­தி­ருப்­ப­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன. 

பௌத்­தர்கள், குறிப்­பாக பௌத்த குரு­மார்கள் கூட்­ட­மாகச் சென்று, முஸ்­லிம்கள் மீது தாக்­கு­தல்கள் நடத்­து­வதும், முஸ்லிம் பள்­ளி­வா­சல்­களைத் தாக்­கு­வதும் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரு­கின்ற சம்­ப­வங்கள் என்­பதை அனை­வரும் அறி­வார்கள். இத்­த­கைய ஒரு சூழலில் அளுத்­கம போன்று முஸ்­லிம்­க­ளு­டைய ஒரு பிர­தே­சத்தில் கல­வரம் மூண்­டுள்ள வேளையில் அல்­லது ஒரு சம்­பவம் நடை­பெற்று பதற்றம் நில­விய ஒரு சூழலில் அங்கு பொலிஸார் வெறுங்கையுடன் காவல் கட­மை­களில் ஈடு­பட்­டார்கள் என்­பதைக் கேட்­ப­தற்கே கஷ்­ட­மாக இருக்­கின்­றது. 

விசா­ர­ணை­யொன்­றுக்­காகச் சென்ற ஒரு பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் மீது கிளி­நொச்சி பரந்தன் பகு­தியில் பயங்­க­ர­வாதி என அர­சாங்­கத்­தினால் கூறப்­பட்ட ஒரு­வ­ரினால் துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து, பொலிஸார் கட­மை­க­ளுக்­காக வெளியில் செல்­லும்­போது துப்­பாக்­கி­களைக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற நியதி நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தாகத் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன. 

இத்­த­கைய ஒரு பின்­ன­ணியில் அளுத்­க­மவில் பொலிஸார் ஆயு­த­மின்றி கட­மையில் ஈடு­பட்­டி­ருந்­த­த­னால்தான் கல­வ­ரத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­களைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் போனது என்ற கார­ணத்தை ஏற்­கவும் முடி­ய­வில்லை. ஜீர­ணிக்­கவும் முடி­ய­வில்லை என அளுத்­கம சம்­ப­வங்­களைத் தொடர்ச்­சி­யாக அவ­தா­னித்து வரு­ப­வர்கள் கூறு­கின்­றார்கள். அர­சாங்­கத்தின் இயற்­கைக்கு மாறான போக்கு இலங்கை என்ற சிறிய தீவில் பல்­லின மக்கள் ஆண்­டாண்டு கால­மாக வாழ்ந்து வந்­துள்­ளார்கள். 

அவர்கள் பல மதங்­க­ளையும் பின்­பற்­று­ப­வர்­க­ளாக இருந்­தார்கள். இன்னும் அந்த முறை தொடர்­கின்­றது. பௌத்­தர்கள் இந்த நாட்டின் பெரும்­பான்­மை­யி­ன­ராக இருக்­கின்­றார்கள் என்­பது உண்மை. அதே­நே­ரத்தில் சிறு­பான்­மை­யி­ன­ராக இருந்­தாலும், ஏனைய மதத்­த­வர்­களும் பெரும்­பான்மை இன மக்­க­ளுடன் இந்த நாட்டில் வாழ்ந்து வந்­தி­ருக்­கின்­றார்கள் என்­பதை எவரும் மறுக்க முடி­யாது. அதனை மறைக்­கவும் இய­லாது. 

மதங்­க­ளி­னாலும், மொழி­யி­னாலும் வேறு­பட்­டி­ருந்­தாலும், இலங்கை மக்கள் இந்த நாட்டில் அமை­தி­யா­கவும், நல்ல பிர­ஜை­க­ளா­கவும் ஐக்­கி­ய­மா­கவும், அந்­நி­யோன்­னி­ய­மா­கவும் வாழ்ந்­தி­ருக்­கின்­றார்கள். இன்னும் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். இந்த வாழ்க்கை என்­பது மரபு வழி வந்த வாழ்க்கை முறை. இயற்­கை­யோடு இணைந்­தது. இயல்பு வழியில் இந்த நாட்டு மக்­களின் வாழ்க்கை முறை­யாக அது பரி­ண­மித்­தி­ருக்­கின்­றது. 

இத்­த­கைய ஒரு சூழலில் மதத்­திற்குள் அர­சி­யலைப் புகுத்தி அல்­லது பௌத்த மதத்தை அர­சி­ய­லாக்கி, பௌத்த மதத்தை மட்­டுமே இந்த நாட்­டுக்­கு­ரிய ஒரே­யொரு மத­மாகக் கொண்டுவரு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை ஆட்­சி­யா­ளர்கள் மேற்­கொண்டு வரு­கின்­றார்கள். இது இயற்­கைக்கு விரோ­த­மா­னது. வேறு வேறு பிரி­வி­ன­ராக இருந்­தாலும், அவ­ரவர் தத்­த­மக்­கு­ரிய வாழ்க்கை முறைக்­க­மை­வாக தமது பகு­தியில் தமது பிர­தே­சத்தில் சுய­மா­கவும், சுதந்­தி­ர­மா­கவும் மற்­ற­வர்­களின் விட­யங்­களில் அத்­து­மீறி தலை­யி­டாத வகையில் வாழ்க்கை நடத்தி வந்­துள்­ளார்கள். 

இந்தத் தனித்­து­வ­மான ஆனால், ஐக்­கி­ய­மான வாழ்க்கை முறையைத் தலை­கீ­ழாக மாற்­றி­ய­மைத்து, அதன் ஊடாக அர­சியல் நலன்­களை அடை­வ­தற்கு பௌத்த தீவி­ர­வா­திகள் முனைந்­தி­ருக்­கின்­றார்கள். இவர்­க­ளுக்கு அர­சாங்­கமும் முண்டு கொடுத்­தி­ருக்­கின்­றது. அவர்­களை அந்த வழியில் ஊக்­கு­வித்து, அதி­கா­ரத்­தி­லான தனது இருப்பைப் பலப்­ப­டுத்தும் போக்கில் இன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் சென்று கொண்­டி­ருக்­கின்­றார்கள். 

விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்தில் வெற்­றி­பெற்­றுள்ள அர­சாங்கம், இரா­ணுவ பலத்­தையும், புல­னாய்­வா­ளர்­களின் செயற்­பா­டு­க­ளையும் தனது ஓரினம் ஒரு மதம், ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற அர­சியல் தாரக மந்­தி­ரத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதற்­காகப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றது. அன்­பையும், அஹிம்­சை­யையும், சகிப்புத் தன்­மை­யையும் போதிக்­கின்ற பௌத்த மதத்தை வன்­முறை வழியில் ஆதிக்கம் பெறச் செய்­வ­தற்­கான முனைப்­புக்­களில் அரச தரப்­பினர் ஈடு­பட்­டி­ருக்­கின்­றார்கள். 

பல்­லி­னங்­க­ளையும், பல ­ம­தங்­க­ளையும் சார்ந்­தி­ருந்த போதிலும், சகிப்புத் தன்­மை­யுடன் கூடிய ஐக்­கி­ய­மான வாழ்க்கை என்ற இந்த நாட்டு மக்­களின் மரபு வழி சார்ந்த வாழ்க்கை நெறியில் இருந்து, அவர்­களைப் பிறழச் செய்­வ­தற்­கான முயற்­சி­களில் அவர்கள் ஈடு­பட்­டி­ருக்­கின்­றார்கள். அந்த முயற்­சியில் அவர்கள் கணி­ச­மான அளவு முன்­னே­றி­யி­ருப்­ப­தையே, இப்­போது அரங்­கே­றி­யுள்ள அளுத்­கம கல­வ­ரங்கள் எடுத்துக் காட்­டு­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றன. 

நாட்டில் மதரீதி­யான அமை­தி­யின்மை நில­வு­கின்­றது என்ற வெளிப்­ப­டை­யான உண்­மையை யதார்த்­தத்தை அர­சாங்கம் ஏற்றுக்கொள்ளத் தயா­ரில்லை. முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள் மீது பல தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. முஸ்லிம் மக்கள் மீதும் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. முஸ்­லிம்­களும் இந்துக்­களும் தமது மத வழி­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்கு இடை­யூ­றாக பல சம்­ப­வங்கள் நடந்­தே­றி­யி­ருக்­கின்­றன. 

இத்­த­கைய சம்­ப­வங்கள் எல்­லாமே, உதி­ரி­யான தனிப்­பட்ட சம்­ப­வங்­களே என்றும், அவைகள் திட்­ட­மிட்ட வகையில் மேற்­கொள்­ளப்­ப­டவே இல்லை என்றும் அர­சாங்கம் அடித்துக் கூறி­யி­ருக்­கின்­றது. விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான வெல்ல முடி­யாத ஒரு யுத்­தத்தில் அர­சாங்கம் அடைந்­துள்ள வெற்­றியைப் பொறுக்க முடி­யாத சில சக்­திகள் நாட்­டிற்கு அப­கீர்த்தி எற்­ப­டுத்­தவும், அர­சாங்­கத்தின் மீது சேற­டிப்­ப­தற்­கா­க­வுமே இங்கு மத அமை­தி­யின்மை அல்­லது மத ரீதி­யான வன்­மு­றைகள் இடம்­பெ­று­வ­தாகப் பொய்ப்­பி­ர­சா­ரங்­களை மேற்­கொண்­டி­ருப்­ப­தாக அர­சாங்கம் வெளிப்­ப­டை­யா­கவே பிர­சாரம் செய்துவரு­கின்­றது. 

மத ரீதி­யான வன்­மு­றைகள் இடம்­பெற்­றி­ருந்தால், அதற்­கான ஆதா­ரங்­க­ளுடன் எவ­ரா­வது அவற்றை நிரூ­பித்தால் அதற்கு சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று சவால்­விடும் வகையில் அர­சாங்கத் தரப்­பினர் கூறி­யி­ருக்­கின்­றார்கள். பிற மத வணக்­கஸ்­த­லங்­களில் ஆக்­கி­ர­மிப்பு தம்­புள்ள பள்­ளி­வாசல், காளி கோவில், கிராண்ட்பாஸ் பள்­ளி­வாசல் என்று வரி­சை­யாக மத­ரீ­தி­யான வன்­முறைச் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. இவைகள் எல்­லா­வற்­றிலும் பௌத்த பிக்­கு­களும், அவர்­களின் உத­வி­யா­ளர்கள், அல்­லது தொண்­டர்கள் என சொல்­லப்­ப­டு­ப­வர்­களே நேர­டி­யாக சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். 

பௌத்த விகாரை அமைந்­துள்ள இடத்தில் முஸ்லிம் பள்­ளி­வா­சலோ அல்­லது இந்து ஆல­யங்­களோ இருக்க முடி­யாது என்று பௌத்த விகா­ரா­தி­ப­திகள் வெளிப்­ப­டை­யாகக் கூறு­கின்­றார்கள். அவ்­வாறு பல ஆண்­டு­க­ளாக அமைந்­துள்ள முஸ்லிம் மற்றும் இந்து வணக்­கத்­த­லங்­களை அவர்கள் வன்­முறை வழியில் அகற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்­ருந்­ததை நாடு மட்­டு­மல்ல இந்த உல­கமே அறியும். பௌத்த விகாரை இருக்கும் இடத்திற்கருகில் பிற மத வணக்­கஸ்­த­லங்கள் இருக்கக் கூடாது என்ற விதி­மு­றையை அனு­ம­தித்­துள்ள இந்த அர­சாங்­கத்தின் ஆட்­சியின் கீழேதான், வடக்கில் திருக்­கே­தீஸ்­வ­ரத்தில் பாடல் பெற்ற அந்தப் புரா­தன இந்து ஆலயச் சுற்­றா­டலில் புத்தர் சிலை­யொன்றை நிறுவி, அங்கு பௌத்த மத குரு ஒரு­வ­ரையும் குடி­யி­ருக்கச் செய்­தி­ருக்­கின்­றார்கள். 

வவு­னியா கன­கா­ர­யன்­குளம் பகு­தியில் குறி­சுட்­ட­குளம் 'ஏ–9' வீதி­யோ­ரத்தில் முத்­து­மா­ரி­யம்மன் ஆல­யத்தின் வள­வுக்­குள்­ளேயே புத்தர் சிலை­யொன்றை வைத்­துள்­ளார்கள். மன்னார் மாவட்டம் முருங்­கனில் பிர­தான வீதி­யோ­ரத்தில் உள்ள இந்­துக்­கோவில் ஒன்றின் வள­வுக்­குள்­ளேயும் புத்தர் சிலை­யொன்றை வைத்து வழி­பாடு செய்­கின்­றார்கள். முல்­லைத்­தீவு மாவட்டம் கொக்­குத்­தொ­டுவாய் பகு­தி­யிலும் இதே­போன்று இந்து ஆலயம் ஒன்றின் அருகில் அதே காணிக்குள் புத்தர் சிலை­யொன்றை வைத்து வணங்கி வரு­கின்­றார்கள். 

அங்கும் பௌத்த மத­குரு ஒருவர் குடி­யி­ருத்­தப்­பட்­டி­ருக்­கின்றார். இது­போன்று பல இடங்­களில் தமிழ் மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் இடங்­களில் மத ரீதி­யான ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த நாடு பௌத்­தர்­க­ளுக்கே சொந்தம் என்ற அர­சாங்­கத்­தி­னதும், பொது ­ப­ல­சேனா அமைப்­பி­னதும் கூற்றை வலி­யு­றுத்தும் வகையில் இந்த நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. 

பௌத்­தர்கள் இல்­லாத இடங்­களில் எல்லாம் இவ்­வாறு புத்தர் சிலை­களை வைத்து பொலி­ஸாரும், இரா­ணு­வத்­தி­னரும் வழி­பட்டு வரு­கின்­றார்கள். கட­மைக்­காக வந்த இடத்தில் மத ரீதி­யான வழி­பா­டு­களை மேற்­கொள்ளக் கூடாது என்று கூற முடி­யாது. ஆனால், இடம் மாற்றம் பெற்றுச் செல்­கின்ற அர­சாங்கக் கட­மையில் ஈடு­பட்­டி­ருப்­ப­வர்­கள் இவ்­வாறு புத்தர் சிலை­களை நிறுவி அவற்றை நிரந்­த­ர­மாக அங்­கேயே இருக்கச் செய்யும் வகையில் செயற்­பட்­டி­ருப்­பது நிச்சயமாக மதரீதியான ஆக்கிரமிப்பே அல்லாமல் வேறில்லை. 

இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் விசார ணைக்கு ஒத்துழைக்கப் போவதில்லை. அவ்வாறு எவரும் வெளியார் இந்த நாட் டுக்குள் வருவதற்கு ஒருபோதும் அனுமதிக் கப் போவதில்லை என்று அரசாங்கம் திட்ட வட்டமாக அறிவித்திருக்கின்றது. அது போதாதென்று அதுகுறித்து பாராளுமன்றத்தில் விவாதித்து முடிவெடுப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டிருக்கின்றனு. 

யுத்தமும் யுத்தச் செய் பாடுகளும் உள்நாட்டு விவகாரம். அதில் தலையிடுவதற்கோ, அது தொடர்பில் விசாரணை செய்வதற்கோ வெளியார் வெளிநாட்டவர்களுக்கும் வெளிநாட்டு அமைப்புக்களுக்கும் உரிமை கிடையாது என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் நாங்கள் உள்நாட்டிலேயே பேசித் தீர்த்துக் கொள் வோம். உள்நாட்டுப் பொறிமுறையின் ஊடாகத் தீர்வு காண்போம் என்பது அரசாங் கத்தின் கூற்று. 

ஆனால், சிறுபான்மையினராகிய முஸ் லிம் மக்கள் மீது வன்முறைகளைப் பிரயோ கிப்பதும், அவர்கள் மீது அரச இயந்திரத் தின் ஆதரவோடு பயங்கரவாதச் செயற்பாடு களை முன்னெடுப்பதும் எங்கள் பிரச்சினை களை நாங்களே தீர்த்துக் கொள்வோம் என்ற கோட்பாட்டுக்கு ஒவ்வாததாகும். அது மட்டுமல்ல. மதரீதியான ஒடுக்கு முறை, இராணுவ ரீதியான ஒடுக்குமுறை, இராணுவத்தைப் பயன் படுத்தி, பாரம்பரிய பிரதேசங்களில் உள்ள காணிகளையும் பரந்த பிரதேசங்களையும் ஆக்கிரமிப்பது போன்ற செயற்பாடுகளின் மூலம் சிறுபான்மை இன மக்களை அடக்கியொடுக்குவதும், 

அவர்களை ஏதிலி களாக்குவதும் அரசாங்கத்திற்கு நல்லதல்ல. வலிமையில்லாதவர்கள் மீது வன்முறை களையும் அதிகாரத்தையும் பிரயோகித்து ஆக்கிரமிப்பதென்பது, தன்னிலும் மேலான வலிமையுள்ள வெளியான் ஒருவனை வலிந்து வரவேற்பதற்கே வழிவகுக்கும் என்பதை அரசாங்கம் கவனத்திற் கொள்வது நல்லது. 

-செல்வரட்ணம் சிறிதரன்-