Breaking News

மனிதரை உயிருடன் சாப்பிடுகிறது ஒரு வகை பக்ரீரியா


இந்த மனிதரை உயிருடன் சாப்பிடுகிறது !
பயங்கரம் !! பொதுவாக இந்த உலகில் உள்ள புழுக்களும் சரி, பக்ரீரியா மற்றும் பஃங்கஸ் ஆனாலும் சரி, அதிகமாக உயிருடன் உள்ள தசைகளை அல்லது தோல்களை அவை உண்பது இல்லை. பொதுவாக அவை ரத்தத்தில் கலந்து தமது திருவிளையாடலைக் காட்டும்.

அதேபோலவே புழுக்களும் அதிகமாக உயிருள்ள தசைகளை அவை ஒருபோது உணவாக உட்கொள்வது இல்லை. ஆனால் ஒரு அரிய வகை பக்ரீரியா , மனிதர்களின் தசைகளை உண்டு வாழ்கிறது. அலெக்ஸ் என்னும் இந்த 34 வயதாகும் இளவயதான தந்தை, தனக்கு ஜலதோஷம் பிடித்திருப்பதாக நினைத்தார்.

இருமல் தும்மல் தான் இவருக்கு முதலில் இருந்தது. கடந்த வருடம் நவம்பர் மாதம் இவர் நோய்வாய்ப்பட்டு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீரென இவரது நுரையீரல், சிறுநீரமக், ஈரல் என்று பல அங்கங்கள் பாதிக்கப்பட்டது. அவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். இரண்டு கால்களும் மற்றும் ஒரு கையும் அழுக ஆரம்பித்தது. இதனால் மருத்துவர்கள் அதனை அகற்றினார்கள்.

பின்னர் தான் இந்த பக்ரீரியாவின் தாக்கத்தை அவர்கள் உணர்ந்து, அதற்கான சிகிச்சையைக் கொடுத்தார்கள். தற்போது சற்று குணமடைந்து வீடு திரும்பிய அலெக்ஸுக்கு மேலும் ஒரு அதிர்சி காத்திருந்தது. தற்போது இவரது உடலில் உள்ள இந்த பக்ரீரியாக்கள், அவரது உதடுகளையும் சாப்பிட ஆரம்பித்துவிட்டது. இதனால் அவர் தனது உதடுகளை இழந்துவிட்டார்.

இதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் தற்போது மேற்கொண்டு வருகிறார்கள். தசையை உட்கொள்ளும் இந்த பக்ரீரியாவை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாது பிரித்தானிய மருத்துவர்கள் திணறுகிறார்கள். ஆனால் ஒரு நல்ல விடையம் இருக்கிறது.

இந்த பக்ரீரியா அவ்வளவு இலகுவாக ஒருவரில் இருந்து மற்றைய நபருக்கு பரவாது. இந்தச் செய்திமட்டும் தான் மக்களுக்கு ஆறுதல் தரும் செய்தியாக உள்ளது.