இசைப்பிரியாவை கொல்ல உத்தரவிட்ட அதிகாரியின் விபரங்கள் கசிந்தது - THAMILKINGDOM இசைப்பிரியாவை கொல்ல உத்தரவிட்ட அதிகாரியின் விபரங்கள் கசிந்தது - THAMILKINGDOM

 • Latest News

  இசைப்பிரியாவை கொல்ல உத்தரவிட்ட அதிகாரியின் விபரங்கள் கசிந்தது


  சமீபத்தில் இசைப்பிரியா உயிரோடு இலங்கை
  இராணுவத்திடம் பிடிபட்ட காட்சிகள் வீடியோவாக வெளியாகி அதிர்வலைகளை தோற்றுவித்தது. இலங்கை இராணுவம் அவரைப் பிடித்து தேசிய தலைவரது மகள் என நினைத்து கேள்வி கேட்பதும் பின்னர் இழுத்துச் செல்வதும் அந்த வீடியோவில் நன்கு பதிவாகியுள்ளது.

  இதனிடையே அங்கே ஒரு இராணுவ அதிகாரி குறுக்கிடுகிறார். அவர் வெறும் 1 செக்கன் மாத்திரமே தோன்றி மறைகிறார். இருப்பினும் அவரது முகம் மிகத் தெளிவாக, மற்றும் (கமராவுக்கு மிக அருகாமையில்) பதிவாகியுள்ளது. இவர் கேணல் தரத்தில் உள்ள அதிகாரி என்றும், இலங்கை இராணுவத்தின் 58 படையணியைச் சேர்ந்தவர் என்றும் கண்டுபிடிகப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  புலம்பெயர் நாட்டில் வாழும் சில சிங்கள ஊடகவியலாளர்கள் இணைந்து, கொழும்பில் இருந்து வெளிநாடு ஒன்றுக்கு தப்பி வந்த சிங்கள இராணுவச் சிப்பாய் ஒருவர் மூலமாகவே இத் தகவல்களை திரட்டியுள்ளார்கள். குறித்த சிங்கள அதிகாரியின் பெயரை வெளியிட்டால் அவர் இலங்கையில் மறைந்துவாழ நேரிடும் எனவும் எச்சரிக்கபப்ட்டுள்ளது.

  முள்ளிவாய்க்காலில் இறுதிவரை நின்று பின்னர், அவரது கையடக்க தொலைபேசியில் அவர் ஒரு காட்சியை படம் எடுத்தார் என்று சிங்கள சிப்பாய் ஒருவரை இலங்கை இராணுவம் தனிச் சிறை ஒன்றில் அடைத்துள்ளார்கள்.

  பின்னர் அவர் 14 மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த சிங்கள சிப்பாயே தற்போது மேலும் சில ஆதாரங்களை கையில் எடுத்துக்கொண்டு வெளிநாடு ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ளதாக அறியப்படுகிறது. குறித்த இன் நபர் 58 வது படையணியில் சேவையாற்றியுள்ளார். அதனால் அவர் இசைப்பிரியாவின் கொலையாளிகள் சிலரை துல்லியமாக அடையாளம் காட்ட முடியும் என்றும் கூறியுள்ளார்.

  சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் கோரிவரும் நிலையில், இந்தச் சிப்பாய் சிலவேளைகளில் சாட்சியாக மாறலாம் என்றும் நம்பப்படுகிறது. இது குறித்து மேலதிக தகவல்கள் இன்னும் சில நாட்களில் முழுமையாக வெளியாகும்.


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: இசைப்பிரியாவை கொல்ல உத்தரவிட்ட அதிகாரியின் விபரங்கள் கசிந்தது Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top